ads



வீ-யூனைடெட் லீக் (VUL) 2nd Edition போட்டிகள் துவங்கின! இன்று இறுதிப்போட்டி!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
VUL 4_1.jpg
காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள மர்ஹூம் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள கால்பந்து மைதானத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட் அகடமி & கால்பந்து கிளப் சார்பாக அகடமியில் பயிற்சிபெறும் வீரர்களுக்கான வீ-யூனைடெட் லீக் (VUL) கால்பந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி துவங்கப்பட்டது. அதன் 2nd Edition போட்டிகள் நேற்று (25/01) மாலை துவங்கியது.
6_2.jpg
இந்த போட்டியில் Amethyst, Pearl, Ruby, Agate, Opel, Topaz, Garnet மற்றும் Aquamarine ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் முறையே 4 அணிகளை கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்று போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகின்றன. இரண்டு பிரிவிலும் அதிகபுள்ளிகளை பெறும் தலா இரண்டு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
7_2.jpg
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் Pearl அணியும் Amethyst அணியும் விளையாடின. இந்த போட்டியில் Amethyst அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் Ruby அணியும் Agate அணியும் விளையாடின. இந்த போட்டியில் Ruby அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டியில் Opel அணியும் Topaz அணியும் விளையாடின. இந்த போட்டியில் Opel அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
8_2.jpg
4-வது போட்டியில் Grrnet அணியும் Aquamarine அணியும் விளையாடின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

ஐந்தாவது போட்டியில் Amethyst அணியும் Agate அணியும் விளையாடின. இந்த போட்டியில் Agate அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆறாவது போட்டியில் Pearl அணியும் Ruby அணியும் விளையாடின. இந்த போட்டியில் Pearl அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
9.jpg
ஏழாவது போட்டியில் Opel அணியும் Garnet அணியும் விளையாடின. இந்த போட்டியில் Opel அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

எட்டாவது போட்டியில் Topaz அணியும் Aquamarine அணியும் விளையாடின. இந்த போட்டியில் Aquamarine அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டிகளை தொடர்ந்து இன்று (26/01/2020) மாலை லீக், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.
26 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top