ads



மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு L.K. மேல்நிலைப் பள்ளி அணி தகுதி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
பள்ளிகளுக்கிடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் வட்டார அளவில் வெற்றிபெற்ற L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் பள்ளி அணியினரை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற L.K. பள்ளி அணியினர், அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி லசால் பள்ளி அணியினருடன் விளையாடினார்கள். இந்த போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் நாசரேத் மர்காஷிஸ் அணியினருடன் விளையாடினார்கள். இந்த போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் வருகின்ற 2020 ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு L.K. மேல்நிலைப் பள்ளி அணி தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
18 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top