ads



பிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.JPG 
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா  29.02.2020, சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

கல்லூரி நிறுவன தலைவர், அல்ஹாஜ் வாவு S. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் Dr.N.சங்கர் Ph.D அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்க இருக்கிறார்.

2016-2019ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை பிரிவில் (UG) 360 மாணவியரும், 2017-2019ம் ஆண்டிற்கான முதுகலை பிரிவில் (PG) 45 மாணவியரும் ஆக 405 பட்டதாரிகள் பட்டம் பெற உள்ளனர்.

இவர்களுள் பகுதி II ஆங்கிலத்துறையில் 1 மாணவியும், பகுதி I அரபித்துறையில் 7 மாணவியரும், இளங்கலை தமிழ்த்துறையில் (B.A. Tamil With CA) 5 மாணவியரும், ஆங்கிலத்துறையில் (B.A. English Literature) 2 மாணவியும், வணிக செயலாற்றியல் துறை (Business Administration) 2 மாணவியும், வணிகவியல் துறை (Commerce) 1 மாணவியும் கணிணிப்பொறியியல் துறையில் (B.Sc Computer Science) 2 மாணவியரும், தகவல் தொழில் நுட்பத் துறையில் (B.Sc information Technology) 4 மாணவியரும், கணிதவியல் துறையில் (B.Sc. Maths) 1 மாணவியரும்,  இதன்படி பல்வேறு துறைகளைச் சார்ந்த 25 மாணவியர் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் (University Rank)  இடம் பெற்று எம் கல்லூரிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

இம்மாணவியருள் அரபி தேர்வில் இளங்கலை ஆங்கிலத் துறைறைச் சார்ந்த மாணவி M.N.செய்யது ஹலிமா ஆஃபியா மற்றும் தமிழ் முதன்மைப் பாடத்தில் இளங்கலை தமிழ் துறையைச் சார்ந்த மாணவி G. ஆறுமுகவள்ளி  ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் (Gold medal)  பெற்றுள்ளார்.

இவ்விருவருக்கும் கடந்த 22.08.2019 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர். மேதகு பன்வாரிலால் புரோஹித் அவர்களின் கரங்களால் சான்றிதழும், தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்கள். 

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியினை எமது கல்லூரியின் அதிகார்வபூர்வ யூடியூப்   (YouTube Channel) இனையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

11th Graduation Day of Wavoo Wajeeha Women's College live on:

https://www.youtube.com/channel/UCenCt-LoRaKsx
iQ
28 Feb 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top