துபாய் நாட்டில் நாளை மரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த சகோதரர் பங்கேற்க உள்ளார். அவருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது :-
காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தின் தடகள வீரர், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த பத்ர் ஸுலைமான் (வயது 38) – ஓமன் நாட்டில் பணிபுரிகிறார். மாரத்தான் நீள்ஓட்டப் போட்டி ஆர்வலரான இவர், பல்வேறு இடங்களில் நடைபெற்ற புகழ்பெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
26.02.2017 அன்று சீஷெல்ஸ் நாட்டில் Seychelles Eco - Friendly Marathon எனும் தலைப்பில் நடைபெற்ற காட்டுப் பகுதியில் ஓட வேண்டிய இப்போட்டியின் 42.195 கிலோ மீட்டர் மாரத்தான் நீள்ஓட்டப் போட்டியில் பெருந்திரளான பங்கேற்பாளர்களுடன் காயலரான பத்ர் ஸுலைமானும் கலந்துகொண்டு போட்டி தூரத்தை இவர் 3 மணி நேரம், 42 நிமிடங்கள், 02 விநாடிகளில் கடந்து, ஏழாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
நாளை (வெள்ளிக்கிழமை 24/01/2020) துபாயில் நடைபெறும் சர்வதேச மாரத்தான் நீள்ஓட்டப் போட்டியில், சகோதரர் பத்ர் ஸுலைமான் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர் இத்துடன் ஐந்தாவது முறையாக மாரத்தான் போட்டியில் பங்கேற்கவுள்ளார், மராத்தான் போட்டியில் வெற்றிபெற எமது ரெட் ஸ்டார் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் :
சகோ. நெய்னா.

வாழ்த்துக்கள் நண்பா