
பள்ளிகளுக்கிடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் வட்டார அளவில் வெற்றிபெற்ற L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் மாவட்ட அளவிலானபோட்டியிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து குடியரசுதின கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றது.
கடந்த 7ஆம் தேதி முதல் மதுரை நாகமலை பகுதியில் அமைந்துள்ள டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் குடியரசுதின கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற L.K. மேல்நிலைப் பள்ளி அணி தனது முதல் போட்டியில் பெரம்பலூர் அணியுடன் விளையாடியது, இப்போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் நீலகிரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அதனையடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மதுரை SDAT அணியினருடன் விளையாடினார்கள். இப்போட்டியில் சமநிலை முறிவு முறையில் வெற்றிபெற்ற L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் அரையிறுதிபோட்டிக்கு தகுதிபெற்றனர்.

அரையிறுதிப் போட்டியில் சென்னை SAI அகடமி அணியினருடன் விளையாடினார்கள். இப்போட்டியில் SAI அகடமி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். இதனையடுத்து மூன்றாமிடத்திற்கான போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர், திண்டுக்கல் மேரீஸ் அணியினருடன் விளையாடினார்கள். இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது, இதில் L.K. மேல்நிலைப் பள்ளி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

வாசகர்கள் கருத்து