ads



ஐக்கியப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தினை திரும்பப்பெற வலியுறுத்தி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பில் 03-01-2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாபெரும் பேரணியின் தொடர்ச்சியாக, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க, 04.01.2020 சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

1) நமது பேரவையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பேரணியில் பெருந்திரளாக பங்கேற்று, வரலாறு படைத்த காயல் நகர மக்கள், கட்டுக் கோப்புடன் பேரணி நடைபெற ஒத்துழைப்பு நல்கி, நமது ஒற்றுமையை பறைசாற்றிய ஜும்ஆ பள்ளிகளின் கத்தீப்கள், அனைத்து ஜமாஅத், சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

2) எதிர்வரும் 10-1-2020 அன்று, காயல் நகர அனைத்து உலமாக்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3) 12-01-2020 அன்று சகோதர சமுதாய மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தை  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

4)  ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ஐக்கியப் பேரவை சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடுவது என  தீர்மானிக்கப்பட்டது.

5)  குடியரசு தினத்தன்று மாலை, "இந்திய விடுதலைப்  போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என  தீர்மானிக்கப்பட்டது.

6) நகரில் உள்ள பெண்கள் தைக்காக்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பேரவை நிர்வாகிகள் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, குழுக்கள் அமைத்து, மேற்கண்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

5 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top