ads



650 மீட்டர் நீள தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது! அலைகடலென மக்கள் பங்கேற்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
3.jpg
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித் கடந்த 18ஆம் தேதி காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நகரின் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக,  இன்று (03/01/2020) மாபெரும் கண்டன பேரணி நடத்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தது.

இவ்வழப்பினை ஏற்று நகரின் அனைத்து ஜூம்ஆ பள்ளிகளிலும் தொழுகை வழமையான நேரத்தைவிட முன்னதாகவே நடத்தப்பட்டது. தொழுகை முடிவுற்றதும், அனைத்து பள்ளிகளில் இருந்தும் நகர்மக்கள் பெருந்திரளாக வள்ளல் சீதக்காதி திடலில் சங்கமித்தனர்.
2_2.jpg
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கண்டன பேரணியில் பங்கேற்றவர்கள் தங்களது தேசபற்றை பறைசாற்றும் வகையில் 650 மீட்டர் நீளம் உடைய தேசிய கொடியை ஏந்தியவண்ணம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மகாத்மா காந்தி நினைவு வளைவு வரை சென்றார்கள்.

பேரணியை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை ஹாஃபிழ் வேனா முஹம்மது ஹஸன் அவர்களின் இறைமறை வசனத்தோடு துவங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மௌலானா அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், அதனை எதிர்ப்பது ஏன் என்பது குறித்தும் விளக்க உரையாற்றினார்கள்.
1_4.jpg
அதனைத்தொடர்ந்து பாதுல் அஷ்ஹாப் ஆலிம் அவர்கள் தமிழில் துஆவினை ஓது, நாட்டுப்பண்ணுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்த கண்டன பேரணியில் நகரின் அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சகோதர சமுதாய மக்கள் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

தகவல் :
சகோ. ஜெய்னுல் ஆப்தீன்,
தலைவர் - காக்கும் கரங்கள்
நிறுவனர் - நகர்நல மன்றம்.
4 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top