ads



குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் மாபெரும் கண்டன பேரணி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித் கடந்த 18ஆம் தேதி காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நகரின் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக, நாளை (27/12) மாபெரும் கண்டன பேரணி நடத்தவும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது.

இப்போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு 1:15 மணியளவில், அல்-ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியில் இருந்து துவங்கி மாகாத்மா காந்தி நினைவு ஆர்ச் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் நகரின் அனைத்து ஜூம்ஆ பள்ளிகளிலும் தொழுகை வழமையான நேரத்திற்கு முன்னதாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top