ads



காவலன் SOS செயலி விழிப்புணர்வு கூட்டம் காயல்பட்டினம் கல்லூரியில் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWWC 7.jpg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலன் SOS  செயலி விழிப்புணர்வு கூட்டம் 13.12.2019 அன்று காலை 10.00 மணியளவில் கருத்தரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் காவல்துறை துணைக் காவல்கண்காணிப்பாளர் திரு.பரத் அவர்கள் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) கல்லூரியின் முதல்வர் முனைவர். திருமதி. R.C. வாசுகி M.A., Ph.D., DGT அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
WWWC 8.jpg
இக்கூட்டத்தின் வரவேற்புரையை மூன்றாமாண்டு கணினி அறிவியல் மற்றும் மாணவி குழுத்தலைவியுமான தௌ. பாத்திமா பஜிலா ஹசின் வழங்கினார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் அவர்கள் காவலன் SOS செயலி பற்றிய விழிப்புணர்வை வழங்கியதுடன் மாணவிகளுக்கு தற்காப்பு பற்றிய விழிப்புணர்வு விபரங்களையும் அறிவித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி R.C. வாசுகி M.A., Ph.D., DGT அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழிப்புணர்வு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

24 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top