
காயல்பட்டினம் நெசவுத் தெரு மக்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kayal Nesavu Football Federation சார்பில் வருகின்ற 2020 ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் Nesavu Football League (NFL) என்ற பெயரில் ஐவர் கால்பந்து போட்டி சென்னை நுங்கம்பாக்கம், மகாத்மாகாந்தி சாலை, Wallace Garden 2nd Street என்ற முகவரியில் அமைந்துள்ள Whistle indoor Playground-ல் நடைபெற உள்ளது.
நெசவுத்தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்கவுள்ள இப்போட்டிகள் ஜனவரி 25ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஜனவரி 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை ஆரம்பம் முதலே கண்டுகளிக்க காயல்பட்டினம் மக்களையும், கால்பந்து ரசிகர்களையும் Kayal Nesavu Football Federation அமைப்பினர் அழைக்கின்றார்கள்.
வாசகர்கள் கருத்து