
Hong Kong Nepalese Federation Club சார்பாக 25 வயதுக்குற்பட்ட inter Ethnic Football Tournament நேற்று (22/12 - ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை Kowloon - Jordan பகுதியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் Home Centre, HKNF, Black Widows, islamic Kasim Tuet Memorial College மற்றும் V-United Sports Club ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. V-United Sports Club அணி தனது முதல் போட்டியில் Home Centre அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், HKNF அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், Black Widows அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்ற V-United அணி islamic Kasim Tuet Memorial College அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்றிருந்து V-United Sports Club மற்றும் Black Widows அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் Black Widows அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. V-United Sports Club அணி இரண்டாமிடத்தை பெற்றது.
வாசகர்கள் கருத்து