ads



குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் சர்வகட்சிகள் நடத்திய கன்டன பொதுக்கூட்டம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து கட்சிகள் ஆதரவோடு கன்டன பொதுக்கூட்டம் கடந்த 19ஆம் தேதி (வியாழக்கிழமை) வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் மீராசா மரைக்கார், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் ஹாஜி அபுல்ஹஸன் கலாமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் காதர், காயல்பட்டினம் அனைத்து சமுதாய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் சலீம், கற்புடையார் பள்ளி வட்ட பங்குதந்தை சில்வர் ஸ்டார் மஸ்கரனாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் முஹம்மது ஹஸன், மாவட்ட பொருளாளர் மீராசா, ம.ஜ.க. மாவட்ட துணைச் செயலாளர் காதர் சாஹிபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தூத்துக்குடி மாவட்ட தெற்குபகுதி தி.மு.க. பொறுப்பாளர் அனிதா R ராதாகிருஷ்ணன், கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் A.P.C.V.சண்முகம், ம.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் S.E. அமானுல்லாஹ், த.மு.மு.க. நகர தலைவர் M.K. ஜாஹிர் ஹுஸைன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பாளர் தமிழினியன் ஆகியோர் கன்டன உரையாற்றினர்.

இந்திய குடியாச்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டம் மதசார்பற்ற இந்தியாவின் அடிதளத்தையே சிதைத்துவிடும். இந்த சட்டத்தில் இஸ்லாமியர்களையும் சேர்த்திருக்க வேண்டும். இலங்கை தமிழர்களையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் விட்டுவிட்டனர். இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு இக்கூட்டம் கன்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்த்து குரலெலுப்பிய தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்ஸ்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

என கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் வாசித்தார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் N.T. முஹம்மத் இஸ்மாயில் புகாரி நன்றியுரையாற்றினார், இறுதியாக N.T. அஹ்மத் ஸலாஹுத்தீன் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
21 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top