ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWWC 100.jpg
    காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா 11.12.2019 அன்று காலை 10.45 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.இரா.செ.வாசுகி எம்.ஏ., பி.எச.டி., டிஜிடி. தலைமையில் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ப.சாரா சமிரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

       தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செல்வி.செ.முத்துகுமாரி எம்.ஏ., எம்ஃபில்., NET. வரவேற்புரை வழங்கினார்.மன்றத் துணை செயலரும் இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவியுமான அ. மகாலெட்சுமி மன்ற அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினரான வே. சசிகலா எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி. அவர்கள் வருகை தந்து பாரதியார்- ஓர் சகாப்தம் என்னும் தலைப்பில் பாரதியார் பிறப்பு, சாதிக்கொடுமை, ஷெல்லியுடன் கொண்ட நட்பு, வறுமை, பெண்ணிய கருத்துகள் ஆகியன குறித்து சிறப்புரை ஆற்றினார்.

       இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பிறதுறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முதுகலை முதலாமாண்டு மாணவி வி.சண்முக சுந்தரி நன்றியுரை வழங்கினார் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி செல்வி ச.ஆயிஷா சித்திகா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் பாரதியார் பிறந்தநாள் விழா இனிதே நிறைவடைந்தது.
17 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top