ads



திருநெல்வேலி இரயில்வே முதன்மை வர்த்தக ஆய்வாளரை சந்தித்து KACF அமைப்பினர் மனு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KACF 1.jpg
இன்று (12/12) காலை KACF அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் அவர்கள் தலைமையில் இணை ஓருங்கிணைப்பாளர் கண்ணன், திரு  E M சாமி, ஜனாப் சாமு, ஜனாப் தங்கதம்பி காதர் சாஹிப் ஆகியோர் திருநெல்வேலி இரயில்வே முதன்மை வர்த்தக ஆய்வாளர் திரு அருண் பிரசாத் அவர்களை அலுவலகத்தில் சந்தித்து KACF சார்பில் நகரின் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் நமதூர் இரயில் நிறுத்தத்தில் இரயில் பெட்டிகள் நிற்கும் இடங்கள் முழுவதும் மின்சார ஒளி விளக்குகள் பொறுத்தவும், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்களில் எரியாத மின்விளக்குகளை உடனடியாக மாற்றவும் இரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தார். KACF கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் ஹாஜி S. அக்பர்ஷா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இச்சந்திப்பு நடைபெற்றதாக அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top