ads



காயல்பட்டினம் மஹ்லரஹவில் கௌதுல் அஃலம் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கந்தூரி நினைவு தினம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கௌதுல் அஃலம் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் கந்தூரி நினைவு நாள் தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரி 1441 ரபிவுல் ஆகிர் பிறை 5 அன்று "மஹான் அப்துல்லாஹில் காதிரி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும், பிறை 6 அன்று "இறை நேசர்களை இனம் கானுவோம் - இணைந்திடுவோம்" என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.M.S. முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் அவர்களும், பிறை 7 அன்று "ஸெய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (ரலி)" எனும் தலைப்பில் மௌலவி M. சுஐபு ரஹ்மான் ஆலிம் ஃபாழில் அன்வரி அவர்களும், "ஸலவாத்தின் சிறப்புகள்" எனும் தலைப்பில் மௌலவி P. முஹம்மது இம்ரான் ஆலிம் ஃபாழில் அஹ்ஸனி அவர்களும், பிறை 8 அன்று "வலிமார்களும் நாமும்" என்ற தலைப்பில் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் M. முஹம்மது ஆலிம் அன்வரி அவர்களும், பிறை 9 அன்று "இறை நேசர்களின் இனிய குணங்கள்" எனும் தலைப்பில் மௌலவி அல்ஹாஃபிழ் M.A. அத்தாவுர் ரசூல் ஷம்ஸூல் ஹூதா ஆலிம் ஃபாழில் மஸ்பாஹி அவர்களும், பிறை 10 அன்று "சோதனையிலும் சாதனை படைத்தவர்கள்" எனும் தலைப்பில் மௌலவி அல்ஹாஃபிழ் P.S. தவ்பீக் அஹ்மது ஆலிம் மிஸ்பாஹி அவர்களும், பிறை 11 அன்று "கௌதுல் அஃலம் கண்ட ஆண்மீகம்" என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஜ் A.K. முஹம்மது அஸ்பர் ஆலிம் அஷ்ரஃபி அவர்களும், பிறை 12 அன்று "ஷரீஅத்தும் தரீகத்தும்" என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் H.A. அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களும் உரையாற்றினார்கள்.

கந்தூரி தினமான இன்று (11/12) மாலை 4:30 மணிக்கு துவங்க உள்ள நிகழ்வுகளுக்கு மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S. செய்யது அப்துர் ரஹ்மான் ஆலிம் பாக்கவி ஃபாழில் அஹ்ஸனி அவர்களின் தலைமையில் "கௌது முஹிய்யித்தீன் (ரலி)" அவர்களின் மௌலிது ஷரீஃப் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு பின்னர் மௌலவி அல்ஹாஜ் L.M.O. முஹம்மது அலி ஆலிம் மஹ்ழரி அவர்கள் தலைமையில் சிறப்பு திக்ரு மஜ்லிஸூம் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து "குவலயம் போற்றும் குத்பு நாயகம்" என்ற தலைப்பில் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் கானா M.A.K. சுஐபு நூஹூ ஆலிம் மஹ்ழரி அவர்கள் உரையாற்ற உள்ளார்கள். அதன் தொடராக அபூர்வ துஆ ஓதும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
11 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top