ads



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் சார்பில் நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KN 3.jpg
அண்மையில் பெய்த மழையின் காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேங்கி சுகாதாரகேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் நகரின் அனைத்து பொதுநல அமைப்புகளும் பல்வேறு நிவாரனப்பணிகளை மேற்கொண்டது.

அதன் வரிசையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையும் நிவாரண பணியாற்ற முன்வந்த சேவையாளர்களை பல குழுக்களாக பிரித்து நகரின் நாலாபக்கமும் பணிகளை மேற்கொண்டார்கள். இந்த நிவாரண பணியில் ஈடுபட்டவர்களை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

நிவாரணப் பணிகள் நடந்தேறுவதற்கு நகராட்சியை பொறுத்தவரை ஒருசில நேரங்களில் அவர்களிடமிருந்து உதவிகள்வர தாமதப்பட்டாலும், பெரும்பாலும் ஐக்கிய பேரவைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியமைக்காக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தன் நன்றியை தெரிவிக்கும் முகமாக நகராட்சிக்கு நேரில் சென்று ஆணையரையும் மற்றும் பல அதிகாரிகளையும் நேற்று (9/12) காலை 11 மணியளவில் சந்தித்து இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்கள். 

அதனையடுத்து, தற்காலிகமாக காயல்பட்டினம் நகராட்சிக்கு மாற்றலாகி வந்துள்ள சுகாதார ஆய்வாளர் காஜா நஜ்முத்தீன் அவர்களுக்கு பேரவை அணிவித்து வரவேற்கப்பட்டது. நமதூருக்கு ஒவ்வொரு தடவையும் சற்று அதிகமாக மழை வரும் காலத்தில் இதுபோன்ற பேரிடர்  நிகழும்பொழுது, நம் மக்கள் நீங்கனா இன்னல்களுக்கு உள்ளாவது ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது.
KN 4_1.jpg
இதற்கு நிரந்திர தீர்வு காணவேண்டும் அதற்குறிய உள் கட்டமைப்புடன் ஒரு திட்டத்தை வடிவமைத்து செய்வதற்கு நகராட்சி முழு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய பேரவை ஒரு வேண்டுகோள் மனுவை ஆணையரிடம் அளித்தனர்.
10 Dec 2019

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Zainul abdeen Says:
Dec 10 2019 5:36PM (IST)


மாஷா அல்லாஹ். ஐக்கிய பேரவையின் சீர்மிகு பணிகள் போற்றுதலுக்குரியது.
தொடர் மழையால் ஏற்பட்ட பேரிடருக்கு நிகரான பாதிப்புகள் ஏற்பட்டதை நாம் அறிவோம். நிவாரண பணிகளை நகராட்சியின் ஒத்துழைப்போடும் பொது மக்களின் பேராதரவோடும் வெற்றிக்கிரமாக செய்து முடித்திருக்கிறது ஐக்கிய பேரவை . இன்னும் சில இடங்களில் பனி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ஐக்கிய பேரவையின் மகத்தான செயல் திட்டத்தால் மட்டும் இது சாத்தியமானது.
இத்தகைய மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட நம் நகர் நலமன்றத்தின் அட்மின்களும், உறுப்பினர்களும் அடங்குவர்.
வல்ல அல்லாஹ் இந்த காரியங்களில் சுயநலமின்றி பணியாற்றி நம் யாவருக்கும் அருள் பாலிப்பானாக.
மேலும் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்து நகராட்சிக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து இத்திட்டம் வடிவம் பெற முயற்சி செய்யவும் வேண்டுகிறேன்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top