ads



நகரில் மழைவெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ள குழுக்கள் அமைப்பு! ஐக்கியப் பேரவை ஏற்பாடு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KMUF Rain 1.jpg 
நகரில் மழைவெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (01/12) காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது...

பேரன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நின்று நிலவட்டுமாக.

இன்று 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் வைத்தி, பேரவைத் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி அவர்கள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும் பேரவை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டது.

நகரை மேற்க்கு, கிழக்கு, வடக்கு, தெற்க்கு என நான்கு பகுதிகளாக பிரித்து, குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அந்தந்த பகுதிகளில் செய்யவேண்டிய நிவாரணப்பணிகளை நாளை காலை முதல் செய்ய உள்ளார்கள்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு JCB இயந்திரமும், தண்ணீரை உரியக்கூடிய மோட்டாரும் வழங்க நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழுவிற்கு தலைவர்களாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு :

மேற்க்குப் பகுதி : ஜனாப் J.A. லரீஃப் அவர்கள், செல் : 9443527749,
கிழக்குப் பகுதி : ஜனாப் சொளுக்கு A.J. முஹியத்தீன் அவர்கள், செல் : 09486812550,
வடக்குப் பகுதி : ஜனாப் K.M.T. சுலைமான் அவர்கள், செல் : 9486655338,
தெற்க்குப் பகுதி : ஜனாப் ஆதம் சுல்த்தான் அவர்கள், செல் : 6383514163,

பாதிப்புள்ள பகுதிகளைச் சார்ந்தவர்கள் இவர்களின் எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நகரின் பல்வேறு பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நன்றி, வஸ்ஸலாம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top