ads



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் மழை நிவாரண அவசர கூட்டம் நடைபெறுகின்றது! ஊர்பொதுமக்களுக்கு அழைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நகரில் பெய்துவரும் கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக்கூட்டம் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து ரேவைசார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது...

நகரில் பெய்துவரும் கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பல குடிசைப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் ஏறி, பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இது சம்பந்தமாக நமது காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் இன்று 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில், அப்பா பள்ளித் தெருவிலுள்ள ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் வைத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காயல்பட்டினத்தின் தன்னார்வலர்கள் அனைவர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவ்வழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top