வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி V-United Sports Club சார்பில் V-United League (VUL) கால்பந்து போட்டி நடத்தப்பட உள்ளது, அதுகுறித்து V-United சார்பாக வெளியிடப்படுள்ள செய்தியாவது :-

ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் பல்வேறு போட்டிகளை நடத்தி இளம் வீரர்களை உருவாக்கிவரும் V-United Sports Club சார்பாக V-United League (VUL) கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஹாங்காங் To Kwa Wan பகுதியில் அமைந்துள்ள Hoi Sham Park மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொறு பிரிவுகளிலும் தலா நான்கு அணிகள் பங்கேற்க உள்ளன.
அல்ஹம்துலில்லாஹ், காயல்பட்டினத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் Kayal Premier League (KPL) முறையில் வீரர்கள் பிரிக்கப்பட்டு, முதன்முறையாக V-United League (VUL) கால்பந்து போட்டி இன்ஷாஅல்லாஹ் ஹாங்காங்கில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியின் சிறப்பம்சமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைசிறந்த இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகளுக்கான அணுசரனைகளை ஹாங்காங்கில் இயங்கிவரும் V-United Forex, Suvai, Turkish Kebab - Indian Restaurant மற்றும் House of Curry ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.
இப்போட்டிகளை ஆரம்பம் முதலே கண்டுகளித்து, இளம் வீரர்களை உற்சாப்படுத்துமாறு ஹாங்காங்வாழ் தமிழர்களை அன்போடு அழைக்கின்றது V-United League (VUL) சுற்றுப்போட்டிக்குழு.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்து