ads



உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை அமைப்புடன் மெகா அமைப்பினர் சந்திப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
உள்ளாட்சி தேர்தலில் தங்களின் நிலைபாடு குறித்து ஆலோசிக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் கூட்டம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அரசியல்கட்சிகள் மற்றும் கருத்துவேறுபாடு உள்ள பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு தமது பணியியை துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக மெகா அமைப்பினருடனான பேச்சுவார்த்தை நேற்று (19/11) ஐக்கிய பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில் - ஊழல் - லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிரான தலைவர், உறுப்பினர்கள் - தேர்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கான சில ஆலோசனைகளும் மெகா அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

மெகா அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள்...

குறிப்பிட்ட சில வார்டுகள் என இல்லாமல் அனைத்து வார்டுகளிலும், நேர்மையான, லஞ்சம் - ஊழலுக்கு எதிரான உறுப்பினர்கள் நிறுத்தப்படவேண்டும்.

அரசியல் கட்சியினர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ - உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு பெறக்கூடாது.

எந்த தனி நபர் / அரசியல் கட்சிகளுக்கும், விலைபோகாத நபர்கள் தேர்வு செய்யப்படவேண்டும்.

ஆகிய கருத்துக்கள் - மெகா அமைப்பு - சார்பாக தெரிவிக்கப்பட்டது.
20 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top