ads



IUML தேசிய தலைவரின் துணைவியார் மஃபிரத்திற்காக மஜ்லிஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
IUML Flag.jpg 
நேற்று 17/11/19 காயல்பட்டினம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் S.J.மஹ்மூதுல் ஹஸன் அவர்கள் தலைமையில் முனீருல் மில்லத் தேசிய தலைவர் பேரசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் MA,Ex Mp அவர்களின் துணைவியார் ஜி.லத்திபா பேகம் அவர்களின் மஃபிரத்திற்காக மஜ்லிஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஊழியர் கூட்டமும் நகர அலுவலகம் தியாகி P.H.M அப்துல் காதிர் மன்ஜிலில் வைத்து நடைப்பெற்று யாசீன் ஓதி ஈஸால் தவாபு செய்யப்பட்டு அரபி சாஹீல் ஹமீது அவர்களால் துஆ ஓதப்பட்டது.

அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஜனாப் எம்.எல்.சேக்னா லெப்பை, நகர செயலாளர் ஜனாப் ஏ.எல்.எஸ்.அபு சாலிஹ், ஜனாப் என்.டி.சலாஹீதீன், ஜனாப் ஜே.ஜே அப்துற்ரஹ்மான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் லீகின் பங்கு குறித்து மாவட்ட துனை தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஷ்ஹாப் அவர்கள் உரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

1.காயல்பட்டணம் நகராட்சி தலைவர் பதவிக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

2.காயல்பட்டணம் நகராட்சி தலைவர் பதவிக்கு திரவிட முன்னேற்ற கழக தலைமையிலலுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

3.காயல்பட்டணம் நகராட்சி தலைவர் பதவியை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகிற்கு திமுக தலைமையிடம் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

4.காயல்பட்டணம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் கடந்த முறை ஆறு வார்டுகளை திமுக மாவட்ட தலைமை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கிதந்து ஒப்பந்தம் செய்யப்பட்டது அதன் அடிபடையில் ஆறு வார்டுகளை முஸ்லிம் லீகிற்கு திமுக தலைமை ஒதிக்கி தர இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.

5.உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்கு கீழ் கண்ட உறுப்பினர்களை இக்கூட்டம் தேர்வு செய்துள்ளது.

1.எம்.ஏ.முஹம்மது ஹஸன்(நகர தலைவர்)

2.எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன்(மாவட்ட செயலாளர்)

3.மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஷ்ஹாப்(மாவட்ட து.தலைவர்)

4.எ.எல்.எஸ்.அபு சாலிஹ்(நகர செயலாளர்)

5.பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தாண்(மாவட்ட து.செயலாளர்)

6.என்.டி.அஹ்மது சலாஹீதீன்

7.எம்.எஸட்.சித்தீக் ஆகிய ஏழு பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் காழி அலாவுதீன் ஆலிம், அரபி சாஹீல் ஹமீது, ஜே.ஜே.அப்துற் ரஹ்மான், எஸ்‌.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், எம்.ஏ.சி.சுஹைல் இப்ராஹிம், ஏ.கே.மஹ்மூது சுலைமான், கே.வி.ஜிப்ரி, எம்.எம்.அய்யூப், கோமான் செய்யிது முஹம்மது, பஷீர் அஹ்மது மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சுஹைல் இப்ராஹிம் நன்றி கூற காழி அலாவூதீன் ஆலிம் துஆ உடன் கூட்டம் நிறைவுற்றது.
18 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top