ads



உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கியப் பேரவை தலையிடவேண்டும்! நகரின் நலன் கருதி, அனைவர்களும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம்.!! ஐக்கியப் பேரவை கூட்டத்தில் முடிவு!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பான, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பொதுக்குழு கூட்டம், நேற்று 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பேரவையின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி அவர்களின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தை மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் K.S. கிதுறுமுஹம்மது ஆலிம் ஃபாஸி அவர்கள் இறைமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

பேரவையின் செயலாளர் ஹாஜி வாவு சம்சுத்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமும் அளித்தார். பேரவை செயற்குழு உறுப்பினர் சொளுக்கு AJ அவர்கள், வார்டு விபரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்...

1. உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கியப் பேரவை தலையிட்டு,  நகரின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும்.

2. கருத்துவேற்றுமைகளைக் கலைந்து, அனைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

3. வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளரை, அந்தந்த பகுதியைச் சார்ந்த ஜமாஅத்தினர்கள் தேர்வு செய்யவேண்டும். தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை அனைத்து ஜமாஅத்தும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அரசியல் கட்சியினர்களிடமும், கருத்துவேறுபாடுள்ள பொது நல அமைப்புகளிடமும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்திட 9 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த, அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

9 பேர் கொண்ட குழுவினர்களின் பெயர்கள் பின்வருமாறு :

1. அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி அவர்கள்,
2. அல்ஹாஜ் S.M.M. சதக்கத்துல்லாஹ் (ஹாஜிகாக்கா) அவர்கள்,
3. அல்ஹாஜ் வாவு M.M. சம்சுத்தீன் அவர்கள்,
4. அல்ஹாஜ் துணி M.A. முஹம்மது உமர் அவர்கள்,
5. மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹப் ஆலிம் ஃபாஸி அவர்கள்,
6. ஹாஜி A.A.C. நவாஸ் அஹ்மது அவர்கள்,
7. அல்ஹாஜ் S.A. ஜவாஹிர் அவர்கள்,
8. அல்ஹாஜ் L.K.K. லெப்பைதம்பி அவர்கள்,
9. அல்ஹாஜ் L.M.E. கைலானி அவர்கள்.

ஆகிய தீர்மானங்கள் பேரவையின் துணைச் செயலாளர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹ்மது அவர்களால் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இறுதியாக நன்றியுரை, துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
18 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top