காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள மர்ஹூம் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள மைதானத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட் அகடமி & கிளப் சார்பாக அகடமியில் பயிற்சிபெறும் வீரர்களுக்கான வீ-யூனைடெட் லீக் Volleyball போட்டிகள் இன்று (09/11) மாலை நடைபெற்றது.
இப்போட்டியில் V-United Red, V-United Gray, V-United Violet, V-United Yellow மற்றும் V-United Blue ஆகிய 5 அணிகள் பங்குபெற்றன. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில் V-United Blue அணியினர் அதிகபுள்ளிகளை பெற்று முதலிடத்தையும், V-United Red அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வின் துவக்கமாக V-United Sports Club-ன் வீரர் ஹாஃபிழ் முஷர்ரஃப் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது.




பின்னர் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த V-United Gray & V-United Red அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து Volleyball போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த V-United Blue & V-United Red அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரை மற்றும் துஆ-வுடன் பரிசளிப்பு விழா நிறைவடைந்தது.
This tournament is usefull for the club people weekly once u will conduct this tournament
Thank you