காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள மர்ஹூம் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள கால்பந்து மைதானத்தில் வீ-யூனைடெட் ஸ்போர்ட் அகடமி & கால்பந்து கிளப் சார்பாக அகடமியில் பயிற்சிபெறும் வீரர்களுக்கான வீ-யூனைடெட் லீக் கால்பந்து போட்டி இன்று (09/11) மாலை துவங்கியது.
இன்றைய துவக்க போட்டியில் V-United Red மற்றும் V-United Yellow அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Red அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் V-United Gray மற்றும் V-United Blue அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Gray அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மூன்றாவது போட்டியில் V-United Violet மற்றும் V-United Red அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Red அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
நான்காவது போட்டியில் V-United Yellow மற்றும் V-United Gray அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Gray அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஐந்தாவது போட்டியில் V-United Blue மற்றும் V-United Violet அணியும் விளையாடின. இந்த போட்டியில் V-United Violet அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்ஷாஅல்லாஹ் இப்போட்டிகளின் தொடர் ஆட்டங்கள் நாளை (10/11) காலை 8 மணியளவில் ஹாஜி VMS லெப்பை மைதானத்தில் நடைபெற உள்ளது.
வாசகர்கள் கருத்து