தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் வட்டார அளவிலும், அதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும் அதிலும் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதிபெறுவார்கள்.
அந்தவகையில் வட்டார அளவில் நடைபெற்ற shuttlecock போட்டியில் வெற்றிபெற்று தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுபெற்ற L.K. மேல்நிலைப் பள்ளியின் மாணவர் S.M. செய்யது இஸ்மாயில், அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார்.
அம்மாணவனை, மாணவர்கள் ஒன்றுகூடலின் போது தலைமை ஆசிரியர் ஜனாப். செய்யது அஹமது அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு கவுரவித்தார்கள்.
தகவல் மற்றும் புகைப்படம் :
ஆசிரியர் மீராதம்பி.
வாசகர்கள் கருத்து