ads



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொதுநல அமைப்பினர்களிடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோரிக்கை!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
GH.jpg
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நேற்று (04/11) காலை 11 மணியளவில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் மற்றும் நகரின் பொதுநல அமைப்புகளும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இக்கூட்டத்தில், அரசு மருத்துவமனைக்கு அவசரமாக செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து தலைமை மருத்துவரால் கோரிக்கை வைக்கப்பட்டது.

இவைகள் அனைத்தையும் கேட்டறிந்த  காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, காயல்பட்டணம் பைத்துல்மால், ஷிஃபா அறக்கட்டளை மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதியளித்தனர்.

அவர்கள் வைத்த கோரிக்கையின் பேரில், மருத்துவமனைக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க, நகராட்சி ஆணையரிடம் உடனடியாக நேரில் சென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரும் வழங்க உடனடியாக உத்தரவிட்டார்.

பொதுமக்கள் உபயோகப்படுத்தும் குடிநீர் பைப்பிற்கு RO பொருத்தவேண்டும், பழுதடைந்த ஜெனரேட்டரை சரி செய்து தரவும், டயாலிஸிஸ் யூனிட் அமையவிருக்கும், பழுதடைந்த அறையை சரி செய்து தரவேண்டும், அதற்கு தண்ணீர் சப்ளை சீராக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும், நோயாளிகளுக்கு கட்டில், பெட் வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இவைகள் அனைத்தையும் கேட்டறிந்த கண்ணியத்திற்குரிய நமதூரின் பெரியவர்கள், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர்.

பழுதடைந்து, உபயோகமில்லாமல் கிடக்கும் ஆண்கள் வார்டு கட்டிடத்தை இடித்து புதுப்பிக்க தமிழக அரசுக்கு நமது பேரவையின் மூலம் கோரிக்கை வைக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.

தகவல் மற்றும் புகைப்படம் :
சகோ. M.A.K. ஜெய்னுல் ஆப்தீன்.
காக்கும் கரங்கள் - நகர்நல மன்றம்.
   தலைவர்     -    நிறுவனர்.
5 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top