ads



நவ. 15 அன்று அபூதபீ கா.ந.மன்ற 15-வது பொதுக்குழு! அபூதபீ, அல்அய்ன் மற்றும் மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
AbuDhabiKAWALogo.jpg
அபூதபீ கா.ந.மன்ற 15-வது பொதுக்குழு நவ. 15 அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அல்அய்ன் மற்றும் மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்புவிடுத்து வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது :-

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 15-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண(ABUDHABI, AL AIN & WESTERN Region) வாழ் காயல் சகோதர, சகோதரிகள் அனைவரும் இச்செய்தியினை அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பித்து, தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும் நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களையும் தர அன்புடன் அழைக்கின்றோம்.

 நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

 இடம்: CAPITAL GARDEN (CAPITAL PARK)–Khalifa Street -Abu Dhabi

குறிப்பு: வருகை ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்திடத்தோதுவாக தங்களின் வருகையை டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் (0509450404), ஷம்சுதீன்(0505665864),MHL ஷேக்(0555082785) ,ரமீஜ்(0555479960) மற்றும் இஷ்ஹாக் ஆலிம் மஹ்ழரி(05094442181) ஆகியோர்கள் தொடர்பு கொள்ளும் போது உங்கள் வருகையை உறுதி செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

காலை 10 மணி முதல் சிறுவர்,சிறுமிகளுக்கான கிராத் மற்றும் தீனியாத் போட்டிகளும்
ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுக்குழு கூட்டமும் அதனைத்தொடர்ந்து மதிய உணவிற்குப்பின் வழமைபோல் சிறுவர் சிறுமியர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு மாலை 5மணிக்குள் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ்  நிறைவுபெறும்.

அழைப்பில் அன்புடன்

நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்

அபூதபீ கா.ந.மன்றம் -ஐக்கிய அரபு அமீரகம்

தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
3 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top