ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நலவாழ்வு மற்றும் உடல் நலவியல் மன்றம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.JPG
வெறிநாய்க்கடி நோய் விழிப்புணர்வு நிகழ்வு காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19.10.2019 அன்று காலை 11 மணியளவில் , நலவாழ்வு மற்றும் உடல் நலவியல் மன்றம் சார்பாக வெறிநாய்க்கடி நோய் விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர். திருமதி. R.C. வாசுகி M.A., Ph.D., DGT  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் வெறிநாய்க்கடி நோய் விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கியது.

கல்லூரி முதல்வர் நல வாழ்வின் இன்றியமையாமை குறித்து தம் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறித் தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர். திருமதி. மை. கிறிஸ்டி மெர்சி M.A., M.Phil., Ph.D வெறிநாய்க்கடி நோயின் கொடுமை, அறிகுறி, பரவும்விதம், தடுப்பு முறைகள் , நாய் கடித்தல் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து விழிப்புணர்வை மாணவியருக்கு வழங்கினார்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியரும் உதவிப் பேராசிரியைகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவியும் மன்றச்செயலருமான ஜே. இந்துமதி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் வெறிநாய்க்கடி நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
21 Oct 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top