ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வீறு கொள் பெண்ணே’!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWC 2019 2 25.jpg                                                       
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.02.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கல்வி மேம்பாட்டுக் குழுவும், பெண்கள் முன்னேற்ற அமைப்பும் (IQAC & Women's Cell) இணைந்து ‘வீறு கொள் பெண்ணே’ என்ற தலைப்பில் செயல் நோக்க உரை நிகழ்வு கல்லூரி நிறுவனர் தலைவர் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. K. கனிமொழி MP வருகை தந்திருந்தார். இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி H.A. ரபினா கிராத் ஒத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R. இராதா கிருஷ்ணன் MLA, கல்லூரி துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் R.C. வாசுகி M.A., Ph.D., DGT. வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A (CS), திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R. இராதா கிருஷ்ணன் MLA, முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் A.D.K. ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அருணாஜோதி M.A., M.Phil., Ph.D. வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் தம் சிறப்புரையில் பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுனை, வேலைவாய்பில் சம உரிமை, உரிமைக்காக போராடும் மன உறுதி குறித்து உரையாற்றினார். தொடர்ந்து மாணவியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

கல்வி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகச் செயலாற்றியல் துறைத் தலைவர் திருமதி S.A.  ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், நகர பிரமுகர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர். இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி M.A.A. முஷர்ரஃபா சுல்தானா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
25 Feb 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top