ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWC 2019 1 31.png
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் மாநில அளவிலான வஜீஹாவின் வண்ணக்கலைவிழா போட்டிகள் நடைபெற்றது. H.A. ரபீனா கிராத் ஓத விழா இனிதே ஆரம்பமானது. இவ்விழாவிற்கு கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செல்வி அ. கல்பனாதேவி M.A., M.Phil., B.Ed., வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செ. வாசுகி M.A., Ph.D., DGT. தொடக்கவுரை நல்கினார். கல்லூரியின் இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி M.A., Ph.D. வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A (CS) சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கினார்.  

இவ்விழாவில் 8 கல்லூரிகளும் 106 மாணவிகளும் கலந்து கொண்டனர். அதிகமான புள்ளிகளைப் பெற்ற திருச்சிலுவை மனையியல் கல்லூரிக்கு வாவு சாஹீல் ஹமீது நினைவு சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசு 1000ரூ பாயையும் கல்லூரி நிறுவனர் தலைவர் வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு. மாரித்தங்கம் M.A., M.Phil., Ph.D. நன்றியுரை கூற, இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி S.A. ஹாஜர் முத்து துஆ ஒத விழா இனிதே நிறைவு பெற்றது. இதில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும், பேராசிரியர்களும், தமிழ்த்துறை மாணவிகளும் கலந்து கொண்டனர்.
31 Jan 2019

வாசகர்கள் கருத்து

Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top