adsஅபூதபீ கா.ந.மன்ற 64ஆவது செயற்குழுவில், மக்களுக்கான பெரிய அளவிலான நலத்திட்டங்களில் துபாய் காயல் மன்றத்தோடு ஒன்றிணைந்து செயல்பட கமிட்டி அமைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
AbuDhabiKAWALogo.jpg
அபூதபீ காயல் நல மன்றத்தின் 64 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 25-01-2019 வெள்ளிக்கிழமை மாலை ம‌ன்ற‌த்தின் செயற்குழு உறுப்பினர் குளம் அபூபக்கர் அவர்கள்  த‌லைமையில் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.

^ மன்றத்தின் இம்மாத ஷிஃபா மருத்துவ உதவியாக 8 மனுதாரர்களுக்கு Rs 60,000 ஒதுக்கப்பட்டது.

^ உறுப்பினர்களின் சந்தாக்களை தொய்வின்றி பெற்றிட பல கருத்துக்களும் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. எல்லா உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நடப்பு சந்தா தொகைகளை அதிக படுத்தி தந்திட முயற்சிகள் செய்யும்மாறு தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

^ பிற காயல் நல மன்றங்களுடன் இணைந்து குறிப்பாக தாய்லாந்து மன்றத்தோடு இணைந்து ஆண்டுதோறும் நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை மற்றும் கத்தார் நலமன்றத்துடன் கைகோர்த்து ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி செய்து வருவது போல் சில குறிப்பிட்ட பெரிய அளவிலான மக்களுக்கான தொலைநோக்கு நலத்திட்டங்களில் துபாய் காயல் மன்றத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது குறிக்கோள்கள் மக்களை சென்றடையும் என்பதை முந்தைய கூட்டங்களில் முடிவு செய்தபடி  கீழ்காணும் ஆறு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது இவர்கள் துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகளோடு நிறை குறைகளை ஆலோசித்து முடிவுகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

1)தலைவர் M.M.மக்பூல் அஹ்மத்

2)S.M.B. ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ

3)P.M.ஹுஸைன் நூருத்தீன்

4)A.R.ரிஃபாய்

5)அப்துல் காதர்(பாதுல் அஷ்ஹாப்)

6)டாக்டர் H.M. ஹமீத் யாசிர். ஆகியோர் நியமிக்கப்பட்டனர்

^ அண்மையில் காலமான ம‌ன்ற‌த்தின் துணைத்தலைவர்  S.A.C. ஹமீத் அவர்களது அன்புத்தாயார் மர்ஹூமா எம்.கே.டீ. செய்யித் அஹ்மத் ஃபாத்திமா அவர்களின்  மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டு  இறுதியாக ஆலிம் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரி அவர்கள் துஆ ஓத,கஃப்பாராவுடன் செயற்குழு கூட்ட‌ம் இனிதே நிறைவுபெற்ற‌து. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)

படங்கள்:
நோனா அபூஹுரைரா
28 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top