ads



காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWC 2019 1 23.png
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறையின் மாநில அளவிலான கருத்தரங்கம் 23.01.2019 அன்று கல்லூரியின் கருத்தரங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. முதலாமாண்டு இயற்பியல் துறை மாணவி செல்வி S.A பாத்திமா ரிஷ்தா கிராத் ஓத நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., B.Ed., PGDCA., துறைத்தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்க அதனைத் தொடர்ந்து திருமதி S.V. சிவஅபினயா M.Sc., M.Phil., B.Ed., PGDCA, துறையின் மன்ற உறுப்பினர் செயற்பொறுப்பாளர் (இயற்பியல்  துறை) அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றிய அறிமுகவுரை வழங்கினார். நமது கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் R.C. வாசுகி M.A., Ph.D., DGT. அவர்கள் Geomagnetic Properties of Earth's Atmosphere  “ஜியோமேக்னட்டிக் ப்ராப்பர்டீஸ் அஃப் எர்த்ஸ் அட்மாஸ்.பியர்” என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்கள். காலை அமர்வில் சிறப்பு விருந்தினர் Dr. ஜான் பீர்ன்ஸ் சௌந்திர நாயகம் M.Sc., M.Phil., Ph.D., PGDCA, அவர்கள் Earth's Observation Satellite Remote Sensing  “எர்த்ஸ் ஆர்பிட்டிங் சாட்டிலைட் ரிமோட் சென்சிங்” என்ற தலைப்பில் தனது படைப்பினை வழங்கி இயற்பியல் துறையின் துணைப் பேராசிரியர் செல்வி A. ஜெய் நிர்மலா M.Sc., M.Phil., B.Ed., SET நன்றியுரை வழங்கினார்.

மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவி செல்வி N. சிவஆனந்தரதி வரவேற்புரை வழங்கி இறுதி அமர்வைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. அவர்கள் தனது மகிழ்ச்சி உரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். Paper Presentation கட்டுரை வளங்குதலில் முதல் இடத்தை திருநெல்வேலி, சாரதா கல்லூரி மாணவியரும், இரண்டாம், மூன்றாம் இடத்தை திருச்செந்தூர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவியர் பெற்றனர்.

Poster Presentation சுவரேட்டியை காட்சிபடுத்துதலில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவியர் பெற்றனர். பின்னர் பல்வேறு கல்லூரியைச் சார்ந்த மாணவியர் கருத்தரங்கைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர். இறுதியாக இயற்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் செல்வி T. கோகிலா ஜெனிஃபர் M.Sc., B.Ed., நன்றியுரை வழங்கி அதனைத் தொடர்ந்து மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவி செல்வி S. அமீர் ஆசிக்கா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.
23 Jan 2019

வாசகர்கள் கருத்து

Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top