adsதுபை காயல் நல மன்றம் நடத்திய காயலர் சங்கமம் - 2018!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
துபை காயல் நல மன்றம் நடத்திய காயலர் சங்கமம் - 2018 நிகழ்வு கடந்த 07.12.18 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் துபை காயல் நல மன்றத்தினரின் ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது...

அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் உபயத்தில் இயந்திரம் மூலமாக அதிவேகத்தில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு டோக்கன்களும் வழங்கப்பட்டன. இதனைத் திறம்பட அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஜமீல் புகாரீ வழிநடத்தினார்.

வருபவர்களுக்கு வரவேற்பு உணவாக சூடான சுண்டலும், வரவேற்பு பானமாக சுவையான காயல் இஞ்சித் தேனீரும் பரிமாறப்பட்டன. ஆண்கள் தரப்பில் ஆண்களும், பெண்கள் தரப்பில் பெண்களும் ஒன்றுகூடி தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று அளவளாவ ஆரம்பித்தனர்.

காலை 11 மணியளவில் சிறார்களுக்கான கிராஅத் ஓதும் நிகழ்ச்சி துவங்கியது. ஹாஃபிழ் எம்.ஏ.சி. முஜாஹித் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியவுடன் அனைவரும் அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு விரைந்தனர்.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.ஏ.சி. முஜாஹித் அருள்மறை வசனங்களை அழகுற ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

வரவேற்புரை :

பொறியாளரும், எழுத்தாளருமான எம்.எஸ். அப்துல் ஹமீது நிகழ்ச்சித் தலைவரையும், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அரேபியா ஹோல்டிங்ஸ் மேனேஜிங் டைரக்டர் கீழக்கரை  ஹபீபுல்லாஹ் காக்கா, அதே நிறுவனத்தின் பொது மேலாளர் மஹ்மூத் சேட் ஆகியோரையும், தாயகத்திலிருந்து அமீரகம் வருகை புரிந்த பெரியோர்களையும், ஐக்கிய அரபு அமீரகங்களிலிருந்தும் வருகை தந்துள்ள, குறிப்பாக அபூதாபி காயல் நல மன்ற உறுப்பினர்களையும், மூத்த உறுப்பினர்களையும், கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளையும், துடிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்களையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை :

பின்னர் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ தலைமையுரை ஆற்றினார். மன்றத்தின் செயல்பாடுகள் விரிவாகி வருவதாகக் கூறிய தலைவர், நமதூருக்கும், அருகிலுள்ள ஊர்களுக்கும் மன்றம் செய்து வரும் உதவிகளை விளக்கிக் கூறினார்.

சிறப்புரை :

பின்னர் சிறப்பு விருந்தினர் அரேபியா ஹோல்டிங்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஹபீபுல்லாஹ் காக்கா சிறப்புரையாற்றினார். பண்டு தொட்டு மார்க்க ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் காயல்பட்டினத்திற்கும், கீழக்கரைக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஹபீபுல்லாஹ் காக்கா, ஸதக்கத்துல்லாஹ் அப்பா காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரையில் குடியமர்ந்ததை நினைவு கூர்ந்தார்.

பின்னர் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவரான அரேபியா ஹோல்டிங்க்ஸ் பொது மேலாளார் மஹ்மூத் சேட் சிறப்புரையாற்றினார். காயல் மக்கள் இவ்வாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடுவது வேறு எந்தச் சமூகத்திலும் நடக்காதது என்று ஆச்சரியத்துடன் அவர் தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கை :

பின்னர் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை பொருளாளர் ஜே. முஹம்மது யூனுஸ் சமர்ப்பித்தார். மன்றம் இக்ரஃ, கேஎம்டி மூலமாக காயல் பதியில் செய்த கல்விச் சேவைகள், மருத்துவ உதவிகள், பைத்துல் மால்கள் மூலமாக செய்து வரும் கல்வி உதவிகள், ஏழை எளியோருக்கான உதவிகள் போன்றவற்றை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

சிறப்பு விருந்தினர்கள் கௌரவிப்பு :

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களுக்கும், தாயகத்திலிருந்து வருகை புரிந்த பெரியோர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதிய விருந்து :

அனைவருக்கும் நெய்ச்கோறு, களறிக் கறி, கத்தரிக்காய் மாங்காய் பருப்பு, பூசணிக்காய் இனிப்பு ஆகியவை பரிமாறப்பட்டன. உணவு உண்டவர்கள் ஊரில் களறிச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டதாக கூறினார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் :

பின்னர் குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ரியாஸ் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரியவர்களுக்கு வினாடி வினா போட்டியும், சாக்கு ஓட்டப்பந்தயமும் நடைபெற்றன. வினாடி வினா போட்டியை செயற்குழு உறுப்பினர் எம்.யூ. ஷேக் சுவையாகவும், சிறப்பாகவும் நடத்தினார். பின்னர் மாலை நேர தேனீரும், சமோசாவும் பரிமாறப்பட்டன.

பரிசளிப்பு :

கிராஅத், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், வினாடி வினா போட்டியிலும், சாக்கு ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி பெற்ற பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 11 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இரண்டு வாய்ப்புகள்), ஜும்ஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (ஒரு வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், இதர பரிசுப் பொருட்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன. பெண்களுக்காவும் தனியாக ஒரு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்த பொதுச் செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன், மொத்த நிகழ்ச்சியையும் நிறைவாக நெறிப்படுத்தினார். நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்கு ARISTO STAR, TOSHIBA ELEVATORS, ARYAS RESTAURANT  ஆகியோர் அனுசரனை வழங்கியிருந்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.

கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்த இப்றாஹீம் காக்கா, ஷேட் முஹம்மத், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்த விளக்கு தாவூத் ஹாஜி, டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனம் மற்றும் பணியாளர்களைத் தந்துதவிய ரஹ்மானியா டிரேடர்ஸ் மற்றும் அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத் மற்றும் முத்து மொகுதூம், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், அழைப்பை ஏற்று மகிழ்வுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த ஒளிப்பதிவாளர்கள் ஸுப்ஹான் மற்றும் ஹபீப், ஒலிபெருக்கி ஏற்பாடுகளைச் செய்த காதர், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ 'டி' பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் முஸஃப்பிர், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து இயந்திரம் மூலம் அதிவேகத்தில் டோக்கன்கள் வழங்கிய ஜமீல் மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஊழியர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு மன்றம் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.

இறுதியாகவும், உறுதியாகவும், இம்மன்றப் பணிகள் சிறப்புற நடைபெறவும், இந்நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெறவும் எல்லா வகைகளிலும் பாடுபடும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகட்டும்.
நிகழ்ச்சியின் படங்களைக் கீழ்க்கண்ட இரு இணைப்புகளில் முழுமையாக காணலாம்:துபாய் காயல் நல மன்றத்திற்காக...

செய்தியாக்கம் :
M.S. அப்துல் ஹமீது

படங்கள் :
ஸுப்ஹான் & ஹபீப்.
5 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top