தூத்துக்குடி மாவட்ட அளவிலான சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று (25/03) மாலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நம்மண்ணின் மைந்தர்களான காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணியும், தூத்துக்குடி ஸ்ப்ரிட்டட் யூத் அணியும் விளையாடின.
இப்போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, சூப்பர் லீக் கோப்பையை வென்றது.
இவ்வெற்றியின் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி தகுதிபெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சூப்பர் லீக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணிக்கான கோப்பையை அவ்வணி வீரர்களோடு KSCயின் தலைவர் ஹாஜி வாவு .எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும், செயலாளர் பேராசிரியர் சதக்தம்பி அவர்களும், அணியின் பயிற்சியாளர் சகோ. செய்யது முஹ்யித்தீன் அவர்களும் இணைந்து பெற்றனர்.

வாழ்த்துக்கள்