ads



சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27வது ஆண்டு விழா (24-02-2018), சனிக்கிழமை அன்று மாலை வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியில் வைத்து வெகு சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு M.சீனி M.Sc., M.Ed., M.Phil., (முதன்மைக் கல்வி உதவியாளர்) அவர்களும், வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் மற்றும் காயல்பட்டணம் முன்னாள் நகர் மன்ற தலைவருமான அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் Aalim S.A.R. அஹமது இஸ்ஹாக் M.A., Azhari (Egypt) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் வாவு M.M. மொஃகுதஸீம் B.A (CS)., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
cmhss3.jpg
ஆங்கில ஆசிரியை செல்வி வாழிஹா பர்வின் B.Sc.,.(CS) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். பள்ளி ஆண்டு அறிக்கையினை பள்ளி தலைமையாசிரியை திருமதி. M. செண்பகவல்லி M.A., B.Ed., அவர்கள் தமிழிலும் மற்றும் செல்வி. R. செல்வ நங்கை M.A., B.Ed., அவர்கள் ஆங்கிலத்திலும் வழங்கினார்கள்.
cmhss8.jpg
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் இடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கும், 100% வெற்றி பெற வைத்த ஆசிரியைகளுக்கும், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
cmhss9.jpg
மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆங்கில ஆசிரியை செல்வி. அமல ராணி B.A D.T.Ed., அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
1 Mar 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top