adsகாயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 12ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwcsd.jpg
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12ஆவது விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் திருமதி. V.A. மெர்ஸி ஸ்டீஃபன் M.A., M.P.Ed., M.Div சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். கல்லூரி மாணவியர் ஐங்குழுவினரின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டார்.

ஒலிம்பிக் கொடியைச் சிறப்பு விருந்தினரும் தேசியக் கொடியைக் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. J.எல்லோரா M.Com., M.Phil., Ph.D  அவர்களும் கல்லூரிக் கொடியைக் கல்லூரி  நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S..செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

ஒலிம்பிக் சுடரைக் கல்லூரி நிர்வாக உறுப்பினர் ஹாஜா வாவு M.A.S. முனிரா ஆலிமா ஏற்றி வைக்க, மாணவி முத்துரமா, மாலதி, ஜெய சித்ரா, மகேஷ்வரி, மேகலா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகப் பெற்றுக் கொள்ள நிறைவாக, புவனேஸ்வரி ஒலிம்பிக் சுடரை ஏற்றினார்.

விளையாட்டுப் போட்டிகளைக் கல்லூரியின் துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) தொடக்கி வைக்க, கல்லுரியின் நிர்வாக உறுப்பினர்கள் 12 வெண் புறாக்களைகப் பறக்க விட்டனர்.

விளையாட்டுக் கழகத்தின்  மாணவச் செயலாளர் K.M. ஜமால் முபீனா உறுதிமொழி கூற, அதனை மாணவியர் வழிமொழிந்தனர். தொடர்ந்து 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், ஓட்டப்பந்தயமும் முன்னால் மாணவியர், பெற்றோர், சிறப்பு விருந்தினர், மழழையர்,ஆசிரியர்கள் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் தடை தாண்டும் ஓட்டமும்,தொடர் ஓட்டமும் நடைபெற்றது. உடற்கல்வியியல் மாணவியர் தம் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் கூட்டு உடற்பயிற்சி (Mass Drill), யோகா, செய்குன்றம் (Pyramid),சிலம்பம், கராத்தே மான்கொம்பு, சுருள்வாள் ஆகியவற்றை நிகழ்த்தி காட்டினர்.

மாலை 7 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி M.N. நஸீபத் சகீனா கிராத் ஓத கல்லூரி முதல்வர் முனைவர். J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D வரவேற்புரை வழங்கினார். உடற்கல்வி ஆண்டறிக்கையைக் கல்லூரி உடற்கல்வியியல் இயக்குநர் திருமதி T. சண்முக பிரபா M.A., M.P.Ed., M.Phil., SET வழங்கினார். கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினருக்கும் சிலம்புக்கலை பயிற்றுநர் திரு. ஸ்டீஃபன் அவர்களுக்கும் நினைவுப்பரிசினை வழங்கினார்.

வாழ்விழ் நல்ல முன்னேற்றம் அடைய முக்கியமானவை தினமும் உடற்பயிற்சி,பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்,விருந்தோம்பல் பண்பு,ஒற்றுமையுணர்வு ஆகியவற்றை கடைபிடித்தொழுக வேண்டும் என சிறப்பு விருந்தினர் சிறப்புரை ஆற்றினார். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சிறப்பு விருந்தினரும் கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும்  இயக்குநரும் முதல்வரும்  பரிசினை வழங்கினர்.

விளையாட்டுப் போட்டியில் Pearl அணி முதல் இடத்தைப் பெற்றது. கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A (CS) நன்றி கூற, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி M.V. ராபியா ஹீமைரா துஆ ஓதஇ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவில் பெற்றோர்களும், பழைய மாணவியரும், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்களும், பேராசிரியப் பெருமக்களும், மாணவியரும் கலந்து கொண்டனர்.
25 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top