ads



10 , 11, 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல் பிரசுரம்! இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டது!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம்  பள்ளிகளில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி பிரசுரம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.  இது குறித்து இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர்  ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு:
 
காயலர்கள் அனைவருக்கும் - இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த 12  ஆண்டுகளாக  காயல் நல மன்றங்கள் மற்றும்  கல்வி ஆர்வலர்களின்  ஒத்துழைப்புகளுடன் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியும், அதற்கான  திட்டங்களை வகுத்து செயலாற்றியும்  வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம்.

தமிழகத்தில் முந்தைய  வருடங்களில் நடைபெற்ற  10 மற்றும் , 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, வருடம் தோறும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு  ''கல்வி வழிகாட்டல் பயிற்சி வகுப்பு'' உள்ளூர் தொலைக் காட்சி (கேபிள் டிவி) மூலம் 9 வருடங்களாக ஒளி பரப்பி  வந்தது இக்ராஃ கல்விச் சங்கம். ஆனால் சமீப வருடங்களாக உள்ளூர் தொலைகாட்சி நிறுவனங்கள் செயல்படாத நிலையுள்ளதால் கடந்த  மூன்றாண்டுகளாக அத்தகைய ஒளிபரப்பை  செய்திட இயலவில்லை.

இந்நிலையில்  அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ''புதிய தலைமுறை கல்வி'' வார இதழில் (08 பிப்ரவரி 2016)  திரு. பொன் தனசேகரன் அவர்களாலும், முதுநிலை ஆசிரியர் திரு வெ.ஸ்ரீதரன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்த அருமையான ஆலோசனைகள் எங்களை கவர்ந்தது.  மிக அழகாக அமைந்திருந்த அந்த ஆக்கங்களை  உடனே சேகரித்து இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக ''அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?'' ,  ''வெற்றிக்கான மந்திரச் சாவி!''  ஆகிய தலைப்புகளில் நான்கு பக்கங்கள் கொண்ட  தனி பிரசுரமாக அச்சிட்டு, முந்தைய ஆண்டு (2015-16) அரசுப் பொதுத் தேர்வெழுதிய, காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயின்ற 10, +2 மாணவ-மாணவியர் அனைவருக்கும் அவர்கள் பயிலும் பள்ளிகளின் மூலம் விநியோகிக்கப்பட்டது. இக்ராஃ வெளியிட்ட அந்த பிரசுரம் மிகுந்த பயனளிக்கக்கூடிய வகையில்  இருந்ததாக  ஆசிரியர்களும்,  மாணவர்களும், பெற்றோர்களும்  மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். மேலும் .சமீபத்தில் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகம் வருகை தந்திருந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு பொன்குமார் அவர்கள் கூட,  இக்ராஃவின் கல்விச் சேவைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது,   அந்த தேர்வு வழிகாட்டுப் பிரசுரத்தை பார்த்து, மிகவும் நன்றாக இருப்பதாகவும், இதனை இந்த ஊர் மாணவ- மாணவியருக்கு மட்டுமில்லாமல் இதர ஊர் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கும் வழங்கினால் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். அதனை பரிசீலிப்பதாக இக்ராஃ சார்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு  (2016-17) இந்த வழிகாட்டு பிரசுரம் மீண்டும் வெளியிடப்பட்டு காயல் நகர பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஊர் பள்ளிகளில் 10, +2 பயின்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் விநியோகிக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட வெளியூர் பள்ளி நிர்வாகம் பிரசுரம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி இக்ராஃவுக்கு நன்றி  தெரிவித்துக் கொண்டனர்.   

இந்நிலையில் நடப்பாண்டு (2017-18) அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு   மாணவ-மாணவியர் பயனடையும் வகையில்  ''அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?'' ,  ''வெற்றிக்கான மந்திரச்சாவி!''  ஆகிய தலைப்புகளில் நான்கு பக்கங்கள் கொண்ட  தனி பிரசுரமாக அச்சிட்டு நமதூரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,  ஆகிய 7 பள்ளிகளிலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ - மாணவியருக்கும், அவரவர் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று அவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கி வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரசுரம் இதோ:
IQRA - Exam page-001.jpg
IQRA - Exam page-002.jpg
IQRA - Exam page-003.jpg
IQRA - Exam page-004.jpg
இப்பிரசுரத்தைப் பார்க்கும் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள், நடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள உங்கள் மக்களுக்கு இதனடிப்படையில் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நாம் மேற்கொண்டு வரும் அனைத்து கல்விப் பணிகளையும் கருணையுள்ள அல்லாஹ் தனதருளால் வெற்றியாக்கித் தந்து, இந்த மாணவர்களை ஒழுக்கத்துடன் கூடிய சாதனையாளர்களாகத் திகழச் செய்வானாக, ஆமீன்.

இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் ஹாஜி என்.என் எஸ்.இ .மஹ்மூது அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது,
நிர்வாகி - இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
25 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top