ads



காயல்பட்டனத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அகமது நவவி அவர்கள் கண்டன உரையாற்றினார்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
IMG20180224WA0017.jpg
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பில் அனைத்து தோழமை கட்சிகள், சமூக அமைப்புகள்,  சமூக ஆர்வலர்கள் திரளாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜார்க்கண்ட் பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து, ஜார்க்கண்ட் பாசிச பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு அந்த மாநிலத்தில் விதித்த தடையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 23/02/2018 அன்று மாலை சரியாக 5 மணிக்கு காயல்பட்டனம் புதிய பேருந்து நிலைய சந்திப்பு அருகில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அகமது நவவி அவர்கள் கண்டன உரையாற்றினார். அனைத்து தோழமை கட்சிகள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கண்டன உரையாற்றினார். திரளாக பொதுமக்கள் பங்கேற்றனர் கோஷமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல் :
சகோதரர் ஸ்ரீவை உஸ்மான்
மாவட்ட செயலாளர் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
தூத்துக்குடி மாவட்டம்.
25 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top