ads



ஜன:31ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை குறித்து ஆட்சேபணை மனு அளித்தவர்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு கருத்துருக்கள் 27.12.2017 மற்றும் 29.12.2017 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து ஆட்சேபணைகள் மற்றும் கருத்துக்கள் ஏதும் இருப்பின் அவற்றை எழுத்துபூர்வமாக தெரிவிக்க 12.01.2018-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீது ஊரக பகுதிகளிலிருந்து 98 ஆட்சேபணை / கருத்து மனுக்களும், நகர்புற பகுதிகளிலிருந்து 402 ஆட்சேபணை / கருத்து மனுக்களும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. 

இந்த மனுக்கள் மீதான முன்னோடி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 31.01.2018 அன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணை மனுக்கள் வழங்கிய பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களுடைய மனுக்கள் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் வரும் 03.02.2018 அன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்திலும் ஏற்கனவே எழுத்து மூலமான ஆட்சேபணை மனுக்கள் அளித்த பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களது மனுக்கள் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

மேற்கண்ட கூட்டங்களில் புதிய ஆட்சேபணைகள் குறித்த மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
28 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top