ads



இந்திய திருநாட்டின் 69வது குடியரசு தின விழாவும், காயலர்களும்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
இந்திய திருநாட்டின் 69ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள காயலர்கள் தத்தம்பகுதியில் நடைபெற்ற தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சில பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் விபரங்கள் வருமாறு...

சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி :
chss.jpg
காயல்பட்டணம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 69வது குடியரசு தினம் ஜனாப் அல்ஹாஜ். M.K.முகைதீன் தம்பி (துரை). அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மாணவர் அகம்மது பிலால் கிராஅத்துடன் தொடங்கியது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப் M.K. ஷெரீப் M.A., M.Ed., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். ஜனாப் அல்ஹாஜ் M.A. செய்யது முகம்மது அலி அவர்கள், பள்ளியின் செயலாளர் ஜனாப் அல்ஹாஜ் A.R. நெய்னா சாகிப்இ B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் அவர்கள், பள்ளியின் தாளாளர் ஜனாப் அல்ஹாஜ் W.M.M.மஸ்னவி, B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் வாவு M.M. உவைஸ் B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் V.N.S. முகம்மது முகைதீன் அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் N.M.H. முகம்மது முகைதீன் அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் M.A. அப்துல் ஹக் B.Com அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் M.T. ஜாபர் சாதிக் B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் V.I. ஜெய்னுல் ஆப்தீன் B.B.A., ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

விழாவில் ஜனாப் அல்ஹாஜ் பேராசிரியர் K.M.S. சதக் தம்பி M.Sc., அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள். சென்ற ஆண்டு பள்ளி, அரசுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் Y.சதக்கத்துல்லாஹ் மற்றும் X. எல்பர்ட வாஸ் M.A., M.Ed., M.Phil., ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக பள்ளி ஆசிரியர் ஜனாப் G. செய்யது அப்துல் காதர் M.Sc., M.Ed., M.Phil., அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் மற்றும் படம் :
ஆசிரியர் M. பீர் முகம்மது உசேன் M.Sc., B.Ed., DCS.,
D. நியாஸ் M.A., B.Ed..,
 
சென்ட்ரல் துவக்கப் பள்ளி :

காயல்பட்டணம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியில் 69வது குடியரசு தினம் ஜனாப் அல்ஹாஜ் பேராசிரியர் K.M.S. சதக் தம்பி M.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஜனாபா S. ஜூனைதா ராணி  வரவேற்புரை ஆற்றினார்கள்.

பள்ளியின் செயலாளர் ஜனாப்.அல்ஹாஜ் A.H. நெய்னா சாகிப் B.Com., அவர்கள், ஜனாப்  அல்ஹாஜ்  வாவு  M.M. சம்சுதீன் அவர்கள், பள்ளியின் தாளாளர் ஜனாப் அல்ஹாஜ் W.M.M. மஸ்னவி B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் M.K. முகைதீன் தம்பி (துரை).அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் வாவு M.M. உவைஸ் B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் பேராசிரியர் K.M.S. சதக் தம்பி M.Sc., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் N.M.H. முகம்மது முகைதீன் அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் M.A.அப்துல் ஹக் B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் M.T. ஜாபர் சாதிக் B.Com., அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் V.I. ஜெய்னுல் ஆப்தீன் B.B.A., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது. விழாவில் ஜனாப் அல்ஹாஜ் V.N.S. முகம்மது முகைதீன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்.

இறுதியாக பள்ளி ஆசிரியர் ஜனாப் A.A. பீர் முகம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் மற்றும் படம் :
ஆசிரியர் M. பீர் முகம்மது உசேன் M.Sc., B.Ed., DCS.,
D. நியாஸ்.M.A.B.Ed.,
 
இலங் கை:
Lankha.jpg
இலங்கையில் உள்ள இந்திய தூரகத்தில் நடைபெற்ற 69ஆவது குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்வில் இலைங்கைக்கான இந்திய தூதர் திரு. தரன்ஜித் சிங் தேசிய கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் இலங்கை காயல்நல மன்றத்தின் அங்கத்தினர்கள் பங்கேற்றார்கள்.

தகவல் மற்றும் படம் :
சகோ. ரஃபீக் ஹாஜி,
இலங்கை. 
 
ஜித்:தா:
Jed 4.jpg
69ஆவது குடியரசு தினத்தை சவுதி அரேபியா தலைனர் ஜித்தாவில் இந்திய தூரகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஜித்தா தமிழ்ச் சமூகம் சார்பில் 'இந்திய குடியரசு தினம் மற்றும் தமிழ்நாடு தினம்-2018' கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தகவல் மற்றும் படம் :
ஹாஜி O.F. செய்யது முஹம்மது சாதுலிஹ்,
ஜித்தா. 
27 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top