adsஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சவுதி அரேபியா - ஜித்தாவில் கடந்த 12.01.2018, வெள்ளிக்கிழமை நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 109-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
KWAJeddahLogo.JPG
எல்லாம் வல்ல ஏக நாயனின் பேரருளால், சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 109-ஆவது செயற்குழு கூட்டம், கடந்த 12.01.2018, வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் அமைந்துள்ள, இம்பாலா கார்டன் உணவகத்தில், இம்மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹமது முஹிய்யதீன் தலைமையில் சகோ. ஷேக் அப்துல்லாஹ் இறைமறை ஓதி துவக்க, சகோ. பொறியாளர் முஹம்மது முஹியதீன் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
IMG_7077.JPG
தலைமையுரை :

அதனை அடுத்து தலைமையுரையாற்றிய சகோ. குளம் எம்.ஏஅஹமது முஹிய்யதீன் இன்று 109-வது செயற்குழுவில் நாம் ஓன்று கூடி இருக்கிறோம். இதுவரை இம்மன்றம் பல சேவைகளை நமதூர் நலனுக்காக செய்தும் தொடர்ந்து பயணிக்கிறது என்றால் அது நம் அனைவரின் ஒற்றுமையால் நடந்த நன்மையே. இந்த ஒற்றுமையும் சேவை மனப்பான்மையும், ஆதரவும் நம் அனைவர்க்கும் தொடர்ந்து இருக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும் என எடுத்துக்கூறிதுடன், பொதுக்குழு சம்பந்தமாக வரவேற்பு உணவு, வாகனம், நிதி மற்றும் ஆண்கள் பெண்கள், குழந்தைகளுக்கான போட்டிகளின் ஏற்பாட்டு குழுக்கள் மற்றும் சிறப்பு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இனிய இந்நிகழ்வை மிகச்சிறப்பாக விமரிசையாக நடத்த வேண்டியும் அதற்கான பணிகளை இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் ஆர்வமூட்டி தயார்படுத்த வேண்டுமென்றும் அனைவரையும் விரும்பி கேட்டுக் கொண்டு நிறைவு செய்தார்.
Jed 1.jpg
மன்ற செயல்பாடுகள் :

நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாகுபாடின்றி, பாரபட்சமின்றி நம்மூரின் நான்கு திசையும் நலம் பெற வேண்டி, கருத்து வேற்றுமைக்கு சிறிதும் இடம் அளிக்காமல் தேவையுடைய நம் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம், தொடர்ந்து அல்லாஹுவின் அருளால் மன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் செய்தும் வருகிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் இங்கொன்றும், அங்கொன்றுமாக தனிப்பட்ட முறையில் இருந்திருந்தால் நம்மால் இத்தனை உதவிகளை செய்திருக்க முடியுமா? என்றால் முடிந்திருக்காது.

இது ஒன்றும் பெரிய சாதனையல்ல, அல்லாஹ் நமக்கு வழங்கிய வாய்ப்பினை நாம் ஒரு அமைப்பின் மூலம் பயன் படுத்துகின்றோம். நாம் செய்யும் இந்த உதவியால் நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் வல்லோன் அல்லாஹ்வின் புறத்தில் ஓர் பெரிய வெகுமதி இருக்கிறது. என்று கூறியதுடன் இக்ரா கல்விச் சங்கத்திலிருந்து வந்த கடிதம் சம்பந்தமாக, அதாவது தலைமை பொறுப்பு பற்றியும், (Unified Professional course) ஒன்றுப்பட்ட தொழில் கல்வி சார்ந்த தகவலையும் விளக்கமுடன் உறுப்பினர்களுக்கு தந்து, அதன் கருத்துக்களை தருமாறு கேட்டுக்கொண்டதுடன், மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் காயலர் குடும்ப சங்கமமாக அடுத்து நடக்கவிருக்கும் 39-ஆவது பொதுக்குழு குறித்து உறுப்பினர்களின் கருத்துக்களைம் பகிர்ந்து கொள்ளுமாறு மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் வேண்டிக்கொண்டார்.

நிதி நிலை அறிக்கை :

பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் உறுப்பினர்களின் சந்தா வந்த தொகைகளின் நல்ல தகவல்களையும் பரிமாறி மேலும் இப்பொழுது வரவேண்டிய மற்றும் பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் சென்ற கூட்டத்தில் முடிவு செய்து வழங்கப்பட்ட தொகைகள் போன்ற முழு விபரங்களையும் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் நிதி நிலை அறிக்கையாக தந்து கொண்டார்.
Jed 2.jpg
மருத்துவ உதவிகள் :

ஷிஃபா மருத்துவ அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவி வேண்டி வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தி, மன்ற தலைவர் குளம் அஹமது முஹியதீன் அதன் நோய், பயனாளி, மற்றும் தொகை இவைகளை குறிப்பிட்டு காட்டி, வந்திருந்த விண்ணப்பங்கள் கர்ப்பபை பாதிப்பு இருவர், டெங்கு, கண் அறுவை சிகிச்சை இருவர், முதுகெலும்பு கட்டி, முறிவு என இருவர், குறைபிரவச குழந்தையின் மருத்துவம், சிறுநீரகம் மூவர், நுரையீரல், மஞ்சக்காமாலை, காது அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு இருவர், புற்றுநோய் மூவர், குடல் இறக்கம், பேருந்து விபத்தில் காயம், இருதயம் அறுவை மற்றும் ஆஞ்சியோ, குடல் வால், மூளையில் இரத்தக்கசிவு, தொடர் சிகிச்சை, மனநிலை பாதிப்பு, என்று பாதிப்புக்குள்ளான மொத்தம் இருபத்தி எட்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குண்டான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்களின் பரிபூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.

யான்புவில் இருந்து வருகை தந்த மன்ற உறுப்பினர் சகோ. ஆதம் சுல்தான், சகோ.பொறியாளர் நைனா முஹம்மது, சகோ.அபுல்ஹசன் மற்றும் மன்றத்து செயற்குழு உறுப்பினர்களின் மன்றம் சார்ந்த நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டபின் செயற்குழு அமர்வு முடிவிற்கு வந்தது.
Jed 3.jpg
தீர்மானங்கள் :

1 – இக்ரா கல்விச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு சம்பந்தமாக வந்திருந்த கடிதத்தை பரீசீலித்து மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்தபின் கீழ்க்கண்ட முடிவை இம்மன்றம் ஒரு மனதாக எடுத்திருக்கிறது.

அ – ஒவ்வொரு காலம் (Term) முடியும் தருவாயில், அடுத்த தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது.

ஆ – புதியதாக இணையும் காயல் மன்றத்தினை, நடப்பு சுற்று முடிந்த பிறகு சேர்த்துக்கொள்ளலாம்.

2 - Unified Professional Course - யில் இணைவதற்கு இம்மன்றம் முழு விருப்பத்தை தெரிவிக்கிறது.

3 – இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் 09 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழு கூட்டம் காயலர்கள் குடும்ப சங்கமமாக, அனைவருக்குமான உள்ளரங்க வெளியரங்க விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் வழமையான குதூகலத்துடன் அல் சப்வா இஸ்திராஹ் எனும் விசாலமான ஓய்வில்லத்தில் நடைபெறும்.

4 - உறுப்பினர்களின் விரிவான கருத்து பரிமாற்றதில் நம் பொதுக்குழு சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் விளையாட்டு நிகழ்வுகளையும், முன்புபோல் ஓர் WhatsApp குழுமம் தற்காலிகமாக அமைத்து அதன் மூலம் எல்லா உறுப்பினர்களின் நல்ல பல கருத்துக்களை அதில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இந்நிகழ்வு முடியுற்ற பின் அதனை கலைத்து விடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்றி நவிலல் :

சகோ. பிரபு எஸ்.ஜே. நூர்த்தீன் நெய்னா நன்றி கூற சகோ. எஸ்.எஸ். ஜாபர் ஸாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!

கூட்டத்திற்கான மற்றும் இரவு உணவிற்கான முழு அனுசரணையை சகோ. பொறியாளர் எம்.எம்.முஹம்மது முஹிய்யதீன் நல்லபடி ஏற்பாடு செய்து இருந்தார். ஜசாக்கல்லாஹ் ஹைரா.

தகவல் மற்றும் படங்கள் :
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
12.01.2018.
26 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top