"இளம் பிள்ளை வாதம்" என்னும் கொடிய நோயில் இருந்து நமது குழந்தைகளை காத்திட போலியோ அற்ற உலகத்தை அமைத்திடுவோம் என்ற முழக்கத்துடன் 5 வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது.

நமது குழந்தைகள் அனைவரும் நலமுடன் வாழ, இளம் பிள்ளை வாதம் என்ணும் கொடிய போலியோ நோயிலிருந்து காத்திட, மறக்காமல் கொடுத்திடுவீர் போலியோ சொட்டு மருந்தை. எத்தனை முறை கொடுத்தாலும் இந்த முறையும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
வருகின்ற 28/01 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஓடக்கரை சத்துணவு மையம், KTM தெரு பஞ்சாயத்து யூனியன் பள்ளி, YUF சங்கம், காயிதே மில்லத் சங்கம், கோமான் தெரு ஆரம்ப சுகாதார மையம், கற்புடையார் வட்டம் சத்துணவு மையம், துணை சுகாதார நிலையம் - கீழலெட்சுமி புரம், L.K. மேல்நிலைப் பள்ளி, ரெட் ஸ்டார் சங்கம், தீவுத் தெரு - பஞ்சாயத்து யூனியன் பள்ளி, அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம், அரசு மருத்துவமனை - காயல்பட்டினம், அரசு பொது நூலகம் - பேரூந்து நிலையம், பெண்கள் தைக்கா - கோமான் தெரு மற்றும் ரஃப்யாஸ் ரோஸரி மழழையர் பள்ளி ஆகிய 16 இடங்களில் நடைபெற உள்ளது.
ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கலந்து கொள்ள வேண்டுமாய் தமிழக அரசின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் - தூத்துக்குடி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) - தூத்துக்குடி, மருத்துவ அலுவலர் - காயல்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆணையாளர் - காயல்பட்டணம் நகராட்சி ஆகியோருடன் இணைந்து பசுமை கோமான் அமைப்பினர் மற்றும் காயல்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம்.
வாசகர்கள் கருத்து