
இந்தியத் திருநாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) சார்பில் மினிமரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்ட உள்ளது.
வருகின்ற 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6:30 மணிக்கு 8.5 கிலோமீட்டர் தூரம் ஓடக்கூடிய மினிமரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க வயது வரம்பில்லை, அனைவரும் பங்கேற்களாம்.
போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரொக்கப்பரிசாக ரூ. 4000, இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ரூ.3000, மூன்றாமிடத்தில் வருபவருக்கு ரூ. 2000 மற்றும் பத்தாவது இடம் வரை வருபவர்களுக்கும் (7 நபர்களுக்கு) ஆறுதல் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்களது பெயர்களை வருகின்ற 24ஆம் தேதிக்குள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) அலுவலகத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்து