ads



SMS கோப்பைக்கான 7ஆம் ஆண்டு JUNIOR FUTSAL மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி 2018 : Kayal Man U, BGF, Real Barca மற்றும் soccer smashers அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
பேங்காங் Sun Moon Star நிறுவனத்தின் சார்பாக 7ஆம் ஆண்டு JUNIOR FUTSAL மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் kayal Man U, Red star rockers, Kayal Fc, Spanish soccers, Real Barca, V-United, Koman 6's, Gallery Birds, BGF, Soccer Smashers மற்றும் Parimar fc ஆகிய 11 அணிகள் பங்கேற்றன.
SMS.jpg
லீக் சுற்றுகளின் முடிவில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப்போட்டியில் Kayal Man U அணியும், Kayal Fc அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Man U அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Kayal Man U அணிக்காக இம்ரான் 3 கோல்களையும், Kayal Fc அணிக்காக அப்துர்ரஹ்மான் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் Gallery Birds அணியும், Real Barca அணியும் விளையாடின. இப்போட்டியில் Real Barca அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. Real Barca அணிக்காக ஓஜி மற்றும் செய்யது ஃபஹீம் தலா ஒரு கோல் அடித்தனர். Gallery Birds அணிக்காக வஸீம் ஒரு கோல் அடித்தார்.

மூன்றாவது காலிறுதிப் போட்டியில் Soccer Smashers அணியும், Parimar Fc அணியும் விளையாடின. இப்போட்டியில் Soccer Smashers அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. Soccer Smashers அணிக்காக யாஸீன் 2 கோல்களையும், முஸ்தாக் மற்றும் ஃபயாஸ் தலா ஒரு கோலையும் அடித்தனர். Parimar Fc அணிக்காக யாஸீன் இரண்டு கோல் அடித்தார்.

நான்காவது காலிறுதிப் போட்டியில் BGF அணியும், Red Star rockers அணியும் விளையாடின. இப்போட்டியில் BGF அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. BGF அணிக்காக அஜ்மல் 3 கோல்களையும், ஹஸன் மற்றும் ஆதில் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

நாளை (15/01) காலை 7 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில், Kayal Man U அணியை எதிர்த்து BGF அணியினர்கள் விளையாட உள்ளார்கள்.

நாளை (15/01) காலை 7:30 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் Real Barca அணியை எதிர்த்து soccer smashers அணியினர்கள் விளையாட உள்ளார்கள்.
14 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top