
2018ஆம் ஆண்டிற்கான சந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து சுற்றுப்போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வருகின்ற 15/01/18 முதல் 26/01/18 வரை நடைபெற உள்ளது. இதில் தென் மாநில அணிகளான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அந்தமான் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
இப்போட்டியில் பங்குபெற உள்ள தமிழக அணிக்கான வீரர்கள் பட்டியல் இன்று அறவிக்கப்பட்டது. இந்த அணியில் காயல்பட்டணத்தை சார்ந்த இளம் வீரர் அஹமது ஷாஹிப் s/o ஹசன்(ENGINEER) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க கால்பந்து அணியின் வீரராவார். தற்போது, சென்னை ஜேப்பியார் கல்லூரியில் பயின்று, இந்திய வங்கி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ். கூட்டாளி மகனே கூடிய விரைவில் நமது நாட்டிற்காக விளையாட துஆ செய்கிறேன். வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் C united விற்கும் சமர்ப்பணம்.
அல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் சமர்ப்பணம்.