ads



K.A பள்ளி மற்றும் தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தை பார்வையிட்டனர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
பேயன்விளையில் அமைந்துள்ள காயல்பட்டினம்-ஆறுமுகனேரி மேனிலைப்பள்ளி மற்றும்  தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தை நேற்று (11.01.2018) பார்வையிட்டனர்.
Mu1.jpg
அம்மாணவர்களை வரவேற்ற நூலகர் முஜீப், நூலக பயன், செயல்பாடு மற்றும் புதிதாக துவங்கப் பட்ட TNPSC போட்டித் தேர்வுக்கான குறிப்புதவி நூற்கள் தனிப்பிரிவையும், அதன் உபயோகம்  பற்றியும் எடுத்துரைத்தார்.
Mu2.jpg
நூலகத்தின் வளர்ச்சி,  தற்காலச்சூழலில் வாசிப்பின் பயன்,   நூலகம் அடைந்த முன்னேற்றம் பற்றியும் நேர்காணல் நிகழ்வின் மூலம் ஆசிரியர்கள் நூலகரிடம் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் ரூ.1000/- செலுத்தி நூலகப்புரவலராக இணைந்தார். ஆசிரியர்கள் சித்ராதேவி, ஸ்பெல்மேன், மேரிகறஸ்டிநவலதா மற்றும் கண்ணன் ஆகியோர்கள் இந்நிழ்வை ஒருங்கிணைத்தார்கள். இறுதியில் நூலக ஆர்வலர் மணிகண்டன் நன்றி கூறினார்.
12 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top