adsஜன. 16-இல் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு – இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் கட்டணமில்லா நுழைவு சீட்டு விநியோகம்!! துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் காயல்பட்டினம்-ரத்தினபுரியில் உள்ள துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில், வருகின்ற 16.01.2018 அன்று "சிறீ ரஜ சிறீ" எனும் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது. இது குறித்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை :-

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!

துளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் (இன்ஷா அல்லாஹ்) வருகின்ற 16.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று, துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் துளிர் சிற்றரங்கத்தில் - "சிறீ ரஜ சிறீ" எனும் சிங்கள மொழி படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் :

காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை பல்வேறு சமூக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்நிகழ்வு துளிர் அறக்கட்டளையின் 2-ஆவது திரையிடலாகும். முன்னதாக, 17.12.2017 ஞாயிறு அன்று “தி கலர் ஆப் பேரடைஸ்” எனும் ஈரானிய படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு :

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.

துளிர் சிற்றரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 25-ஆவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

நகரின் பல்வேறு அமைப்புகள், பள்ளிகள் & நற்பணி மன்றங்களுடன் இணைந்து, தொடர்ச்சியாக மாறுபட்ட பல நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

அவ்வகையில், இந்நிகழ்வானது நமதூரில் சிறப்பு குழந்தைகளுக்காக சீரிய பணியை மேற்கொண்டுவரும் துளிர் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் முதன்முதல் திரையிடல் ஆகும்.

சிறப்பு திரையிடல்!

இந்நிகழ்வில் திரையிடப்பட உள்ள "சிறீ ரஜ சிறீ" படம் கல்விக் கூடங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் & சமூக மதிப்பீடுகளின் மோதல்கள் குறித்து பேசுகிறது.

பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்த சிங்கள மொழி படம், ஆங்கில துணைத்தலைப்புடன் திரையிடப்பட உள்ளது.
நுழைவு சீட்டு
thu1_1.jpg
நுழைவு சீட்டு

இந்நிகழ்ச்சிக்கான கட்டணமில்லா நுழைவு சீட்டு - இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் / ஆட்களிடன் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

1> துளிர் சிறப்பு பள்ளி – காயல்பட்டினம் (04639: 280215, 284662)

2> எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு (சாளை பஷீர் ஆரிஃப்: 9962841761)

3> கத்தீப் மாமூனா லெப்பை (7904098006)

4> கே.எம்.டீ. சுலைமான் (9486655338)

5> மஹ்மூது லெப்பை (7200189778)

நுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படவிருப்பதால், ஆர்வமுள்ள அன்பர்கள் - மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் / ஆட்களிடம் நுழைவு சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ், சரியாக காலை 10:00 மணிக்கு திரையிடல் துவங்கும் என்பதால், முன்கூட்டியே அரங்கத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
thu2.jpg
தொடர்புடைய முந்தைய பதிவுகள்


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் :
வக்கீல் அஹமது & சாளை பஷீர் ஆரிஃப்

செய்தியாக்கம் :
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
11 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top