adsவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அறிக்கை!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
 wwwc.JPG
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 187-ன் சார்பாக 2017-18ம் ஆண்டின் சிறப்பு முகாம் 20.12.17 முதல் 26.12.17 வரை நடைபெற்றது. இம்முகாமின் தொடக்கவிழா 20.12.17 புதன்கிழமை அன்று மாலை 7 மணிக்கு இராமசாமிபுரம், திருச்செந்தூர் தாலுகா, திருச்செந்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த இராமசாமிபுரம் அம்மன் கோவில் மைதானத்தில் இனிதே தொடங்கியது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியமும் கணிணிப்பயன்பாட்டைச் சார்ந்த மாணவி ரா. மகேஸ்வரி வரவேற்புரை வழங்க, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் த. கோகிலா ஜெனிபர் M.Sc., B.Ed., முகாம் விளக்கவுரையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.com., M.Phil., Ph.D. அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.
W8.jpg 
கல்லூரியின் இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. அவர்கள் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார். இராமசாமிபுரம், ஊர்த்தலைவர் K. ரத்தினசபாபதி பொருளாளர் N. சுப்பிரமணியன், மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டனர். கல்லூரி மாணவி S. உதயா நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
 
இரண்டாம் நாள் 21.12.17 வியாழன்கிழமை காலை 10.00 மணிக்கு “டெங்கு விழிப்புணர்வு முகாம்” நடைபெற்றது. இச்சிறப்பு முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் தலைமையேற்றார். டெங்கு காய்ச்சல் பரவும் விதத்தையும், வராமல் தடுப்பதுப்பற்றியும் காயல்பட்டணம், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் M. முருகபொற்செல்வி MD (S) அவர்கள் மாணவிகளுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

மாலை 6 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, புனித சவேரியார் கல்லூரியின் பொருளியியல் துறை பேராசிரியர், முனைவர் திரு ஜெ. அமல்நாதன் M.A., M.Phil., Ph.D.. “இந்தியாவின் சமூக பொருளியியல் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் பொருளாதார வளர்ச்சியில் தற்போது இந்தியாவின் நிலைமை குறித்துச் சிறப்புரை ஆற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் மாணவியரும், ஊர் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
மூன்றாம் நாள் 22.12.17 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் Friends Driving Schoolயை சேர்ந்த N. சந்திரன் DME, எம் கல்லூரி மாணவிகளுக்கு “சாலை பாதுகாப்பு பயிற்சி” என்னும் தலைப்பில் சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்து விளக்கம் அளித்தார். மதியம் 2 மணியளவில் கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., “பெண்கள் முன்னேற்றம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி, பிஷப் கால்டுவெல் கல்லூரியின் பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் திரு ஜெ. மோசஸ் ஞானகன் M.A., M.Phil., Ph.D. “மனித உரிமைகள்” என்னும் தலைப்பில் மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 W9.jpg
நான்காம் நாள் 23.12.17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்மருத்துவமுகாம் நடைபெற்றது. திருநெல்வேலி, அகர்வால் கண் மருத்துவக் குழுவினர்கள், ஊர் பொதுமக்களுக்கு கண் மற்றும் இரத்த அழுத்தம் பற்றிய பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இம்முகாமில் 80க்கும் மேற்பட்ட ஊர்ப்பொதுமக்கள் மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டு கண் பரிசோதனைச் செய்து கொண்டனர். மேலும் இரத்த அழுத்தம், நீரழிவு நோய்களையும் பரிசோதித்துக் கொண்டனர்.

மாலை 6 மணியளவில் “வெற்றியுள்ள வாழ்விற்கான அவசியங்கள்” என்னும் தலைப்பில் திருநெல்வேலி, தூயயோவான் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் திரு. இ. கதிரவன் M.A., M.Phil., Ph.D. அவர்கள் மாணவிகளுக்கு கருத்துக்களை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
ஐந்தாம் நாள் 24.12.17 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இராமசாமிபுரம் கோயில் மைதானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் மாணவிகள் ஈடுபட்டனர். மதியம் 2 மணியளவில் கல்லூரியின் அரபித்தறைத் தலைவர் திருமதி S.A.K. முத்து மொகுதூம் பாத்திமா M.A., M.Phil., கைத்தொழில் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் மாணவியரும், ஊர்ப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் திருமதி மு. சூரத் ஷீபா M.A., M.Phil., SET., சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
ஆறாம் நாள் 25.12.17 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் “தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. அதில் ஊர்த்தலைவர் திரு K. ரத்தினசபாபதி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்துக் கொண்டனர். மதியம் 2 மணியளவில் கைத்தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் பொதுகூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி K. உமா மகேஸ்வரி M.Sc., M.Phil.,  சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
ஏழாம் நாள் 26.12.17 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டனர். மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இராமசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுவர் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
 
முகாமின் ஒவ்வொரு நாள் காலையும் மாணவியருக்கு யோகாப்பயிற்சி அளிக்கப்பட்டன. 26.10.17 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் “அறிவியல் வளர்ச்சியினால் பெரிதும் ஏற்படுவது இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் திருநெல்வேலி, தூயயோவான் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் திரு. கு. கதிரேசன் M.A., M.Phil., Ph.D. தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தின் பேச்சாளர்களாக எம் மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிறைவு விழாவில் இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி V. அஜேகா வரவேற்புரை வழங்க முகாம் அறிக்கையினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் த. கோகிலா ஜெனிபர் M.Sc., B.Ed., வாசிக்க கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் மற்றும் ஊரின் நிர்வாக பொருப்பில் இருக்கும் N. சுப்பிரமணியன் வாழ்த்துறை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
9 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top