ads



ஐக்கிய விளையாட்டுச் சங்கம் நடத்திய "யூனைடெட் சூப்பர் கோப்பை" கால்பந்து 2017 : Gallery Birds அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ufl L.jpg
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் (USC) சார்பில் யூனைடெட் கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. 5ஆம் ஆண்டாக இவ்வருட போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
BS.jpg
இவ்வாண்டு, Celtic Fc, Gallery Birds, FAAMS, Kayal Manchester, BS Contractors மற்றும் Hardy Boys ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்பட்டது.
FAAMS_1.jpg
இவ்வருடத்தின் முதல் நாள் போட்டியில் Celtic FC அணியும், Gallery Birds அணியும் விளையாடின. இப்போட்டியில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரர்களாக Gallery Birds அணியின் வீரர் வஸீம் மற்றும் Celtic Fc அணியின் வீரர் அஜ்மல் ஆகியோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வீரர்களுக்கு துவக்கநாள் போட்டியின் சிறப்பு விருந்தினர் ஜனாப். அன்சாரி பரிசுகளை வழங்கினார்.
Hardy Boys.jpg
இரண்டாம் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் Celtic Fc அணியை எதிர்த்து FAAMS அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் FAAMS அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
UFL6.jpg
இரண்டாவது போட்டியில் Kayal Manchester அணியை எதிர்த்து Gallery Birds அணியினர் விளையாடினார்கள். போட்டி நேர இறுதி வரை இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மாலை நடைபெற்ற போட்டியில் BS Contractors அணியை எதிர்த்து Hardy Boys அணியினர் விளையாடினார்கள். போட்டி நேர இறுதி வரை இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மூன்றாம் நாள் காலை நடைபெற்ற முதல் போட்டியில் Hardy Boys அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Hardy Boys அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் Celtic Fc அணியை எதிர்த்து BS Contractors அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Celtic Fc அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மாலை நடைபெற்ற போட்டியில் FAAMS அணியை எதிர்த்து Gallery Birds அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 
நான்காம் நாள் காலை நடைபெற்ற முதல் போட்டியில் Hardy Boys அணியை எதிர்த்து Gallery Birds அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இரண்டாவது போட்டியில் FAAMS அணியை எதிர்த்து BS Contractors அணியினர் விளையாடினார்கள். போட்டி நேர இறுதி வரை இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மாலை நடைபெற்ற போட்டியில் Celtic Fc அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Celtic Fc அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஐந்தாம் நாள் காலை நடைபெற்ற முதல் போட்டியில் Celtic Fc அணியை எதிர்த்து Hardy Boys அணியினர் விளையாடினார்கள். போட்டி நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இரண்டாவது போட்டியில் BS Contractors அணியை எதிர்த்து Gallery Birds அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மாலை நடைபெற்ற போட்டியில் FAAMS அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். போட்டி நேர இறுதி வரை இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

ஆறாம் நாள் காலை நடைபெற்ற போட்டியில் BS Contractors அணியை எதிர்த்து Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Kayal Manchester அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மாலை நடைபெற்ற போட்டியில் FAAMS அணியை எதிர்த்து Hardy Boys அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Hardy Boys அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் 7ஆம் நாள் காலை நடைபெற்ற போட்டியில் லீக் சுற்றுகளின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்த Celtic Fc அணியை எதிர்த்து நான்காம் இடத்தை பிடித்த Kayal Manchester அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Kayal Manchester அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
KM.jpg
லீக் சுற்றுகளின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த Hardy Boys அணியை எதிர்த்து காலை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற Kayal Manchester அணியினர் விளையாடினார்கள்.  போட்டி நேர இறுதி வரை இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Kayal Manchester அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
GB.jpg
போட்டியின் 8ஆம் தினமான டிசம்பர் 31ஆம் தேதி மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் லீக் சுற்றுகளின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் இடத்தை பிடித்த Gallery Birds அணியும், Kayal Manchester அணியும், விளையாடின.
UFL2017.jpg
இப்போட்டியில் Gallery Birds அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று யூனைடெட் சூப்பர் கோப்பையை தட்டிச்சென்றது.
3 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top