adsஜன:02ல் நகராட்சி வார்டு வரைவுப் பட்டியல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்! காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில் நகர் மக்களுக்கு அழைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அன்பார்ந்த காயல் நகர மக்களே !      அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கடந்த 27-12-2017 புதன்கிழமை அன்று நமதூர் நகர்மன்ற வார்டுகளின் புதிய வரைவுப் பட்டியலை வெளியிட்டார். நமது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அன்று மாலையே நகராட்சிக்கு சென்று, அந்த பட்டியலின் நகலைப் பெற்றது.

அன்று இரவு, பேரவையில் இடம்பெற்ற நிர்வாகிகள் கலந்துரையாடலில் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இம்முடிவைத் தொடர்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வையும் பேரவை மேற்கொண்டது.

இதற்கிடையில் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பட்டியலை உறுதிப்படுத்தி 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை, சென்னை தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும், அவசியப்பட்டால் இதில்  சிறிய திருத்தங்கள் இடம்பெறலாம் என்றும்  தகவல் கிடைத்தது.

இருப்பினும், 30 ஆம் தேதி மாலைதான், உறுதிப்படுத்தப்பட்ட இப்பட்டியல் நமது கரங்களில் கிடைத்தது. மேலும் ஆட்சேபனை மற்றும் திருத்தங்களை தெரிவிக்க ஏற்கனவே 02-01-2018 வரை அவகாசம் அளித்திருந்தனர். தற்போது அதை  04-1-2018 வரை  நீட்டித்து  அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியலில் நமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன.

எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் படியாயான வகையில் வார்டுகள் உருவாக வேண்டுமென பேரவை விரும்புகிறது, ஊர் மக்களின் விருப்பமும் அதுவே. நமது ஐக்கியப் பேரவை இவ்விஷயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காண முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வார்டுகள் எவ்வாறு அமைந்தால் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்ய, இந்நகரில் பொது நலத்தோடு தொடர்புடையோரின் ஆலோசனையை பேரவை பெறவிரும்புகிறது. எனவே, இதற்காக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை கீழ்கண்டபடி, எதிர்வரும் 02-01-2018 செவ்வாய்க் கிழமை அன்று பேரவை ஏற்பாடு செய்துள்ளது.  

வார்டு வரைவு பட்டியல் சம்பந்தமாக இதுவரை நாம் அறிந்துள்ளவைகளும், இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் இறுதி செய்யப்படும் கோரிக்கையை, நமது நகராட்சியில் இன்ஷாஅல்லாஹ், 03-01-2018 புதன்கிழமை அளித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே , 2 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் 3 ஆம் தேதி நகராட்சியில் கோரிக்கை அளிக்கும் நிகழ்விலும் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்விரு நிகழ்விலும் பேரவை நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அரசியல் கட்சிகள் சமுதாய இயக்கங்கள், பொது நல அமைப்புக்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஆதவாளர்களும், பொதுச் சேவையோடு தொடர்புடையோரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

நமது ஒற்றுமையான கோரிக்கையை உரியவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், அனைவரும் ஒன்றிணைந்து இதில் செயல்பட  வேண்டுகிறோம்.

ஆலோசனைக் கூட்ட நிகழ்முறை...

நாள் : 02-01-2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி

இடம் : பேரவைச் செயலர் ஹாஜி வாவு M.M. சம்சுதீன் அவர்கள் இல்ல வளாகம், வாவு நகர் - KMT அருகில்- காயல்பட்டினம்

இவண்,
நிர்வாகிகள் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை.
31-12-2017.
31 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top